ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர் 2’: புரமோ வீடியோ வெளியானது!
நடிகர் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் கடந்த 2013ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ஜெயிலர். இதையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜா இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது இதற்கிடையே மீண்டும் நெல்சன் இ யக்கத்தில் ஜெயிலர் 2 பட த்திற்க்காக இணைந்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வந்தது இந்நிலையில்,அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று (ஜன.,14) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘ஜெயிலர் 2’ படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிமுக வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில்,நெல்சன் மற்றும் அனிருத் கோவாவில் ரிலாக்ஷாக ஸ்டோரி டிஸ்கஷனில் இருக்க, அப்போது அந்த இடத்தை தகர்த்துக் கொண்டு ரஜினிகாந்த் பல பேரை போட்டுத் தள்ளிக் கொண்டே மாஸ் என்ட்ரி கொடுப்பதும் அவரை போட்டுத் தள்ள ஒரு பெரிய துப்பாக்கிகளுடன் வண்டிகளில் கும்பல் வர, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத சூப்பர் ஸ்டார் கண்ணாடியை ஸ்டைலாக கழட்டிக் காட்ட ஸ்னைப்பர்கள் ராக்கெட் பாம்ப்களை வெடிக்கச் செய்து அந்த வாகனங்களை சிதறடிக்கும் காட்சிகள் அடங்கிய மாஸான புரமோ வீடியோவை நெல்சன் வெளியிட்டு ஜெயிலர் 2 அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.