“அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்’ திறக்கிறது”-கலைப்புலி எஸ்.தாணு அதிரடி!
பிரபல எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவின் `வாடிவாசல்’ நாவலை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் வாடி வாசல் என்ற தலைப்பிலேயே திரைப்படம் ஒன்றை தயாரிப்பதாகவும் , கதாநாயகனாக நடிப்பதாகவும் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிப்பதாகவும், முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜுலை 16, 2021ம் தேதியன்று வெளியானது. அதன்பின் அப்படத்திற்கான ‘டெஸ்ட் ஷுட்’ 2022ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த போது சில அப்டேட்களுடன் காணொளி ஒன்றையும், படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்திற்காக சூர்யா, ஒரு ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து அதனுடன் பயிற்சி பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின…இதையடுத்து . தாணு- வெற்றிமாறன்- சூர்யா கூட்டணி திரையுலகில் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் வெற்றி மாறன் `விடுதலை’ திரைப்படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்ததால் இத்திரைப்படம் தாமதமானது.இதற்கிடையே 2 வருட இடைவெளியை முழுதாக எடுத்து கொண்ட விடுதலை மற்றும் விடுதலை-2 படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இந்நிலையில் ‘வாடிவாசல்’ படத்தை தயாரிக்க உள்ள தயாரிப்பாளர் எஸ். தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில், வெற்றிமாறன் சூர்யா ஆகியோருக்கு பூக்கூடை வழங்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்’ திறக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது..