நேசிப்பாயா. (விமர்சனம்.) காதலர்களுக்கான படம்!

நேசிப்பாயா திரைப்படத்தினை XB Film Creators நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் எஸ். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இணைத் தயாரிப்பாளராக சினேகா பிரிட்டோ பணியாற்றியுள்ளார். மறைந்த முன்னணி நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளி இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். நீலன் சேகருடன் இணைந்து எழுதி, இயக்கியிருக்கிறார் விஷ்ணு வர்த்தன்.

ஆகாஷ் முரளி நாயகனாகவும், அதிதி ஷங்கர் நாயகியாகவும் நடித்திருக்க அவர்களுடன் பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கோச்சலின், ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்க, இப்படத்திற்கு பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர் கேமரூன் எரிக் பிரைசன் செய்திருக்கிறார். ஸ்ரீகர்பிரசாத் படத் தொகுப்பு செய்திருக்க, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெடரிகோ கியூவா சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ பிரேக் அப் ஆன நிலையில், காதலியைக் காப்பாற்ற கண்டம் விட்டு கண்டம் தாண்டும் காதலன். இந்த கதைக் கருவை வைத்துக் கொண்டு, இளைஞர்களுக்கான ஆக்‌ஷன், எமோஷனல் லவ் ஸ்டோரியை கொடுத்திருக்கிறார், ஸ்டைலிஷ் இயக்குநர் விஷ்ணு வர்த்தன்.

கல்லூரியில் படிக்கும் ஆகாஷ் முரளிக்கு அதிதி ஷங்கர் மீது கண்டதும் காதல் வருகிறது. இதனால், அவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார். முதலில் மறுக்கும் அதிதி பின்னர் சம்மதிக்கிறார். அதன் பின்னர் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் தங்கி வருகின்றனர். அதிதிக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. இருவரும் சில காலம் பிரிந்திருக்க முடிவு செய்கின்றனர். ஆனால், அதிதியின் மேலுள்ள ஓவர் பொசசிவ்னஸ் காரணமாக ஆகாஷுக்கும் அதிதிக்கும் இடையே பிரச்சனை வருகிறது. தன்னை சரியாக புரிந்து கொள்ளமுடியாத அகாஷிடமிருந்து நிரந்தரமாக விலக அதிதி முடிவு செய்கிறார். இருவரும் சேர்ந்து பிரியும் முடிவை எடுக்கின்றனர்.

அதிதி போர்ச்சுக்கலுக்கு வேலைக்கு சென்ற பின்னர், ஆகாஷ் சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். சுமார் இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், அதிதி, ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, போர்ச்சுக்கல் சிறையிலடைக்கப்படுகிறார். சென்னையில் இந்த செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. இது குறித்து ஆகாஷூக்கும் தெரிய வருகிறது. முன்னாள் காதலியான அதிதியை காப்பாற்ற போர்ச்சுக்கல் செல்கிறார். ஆதிதியை அவர் காப்பாற்றினாரா?, இல்லையா? அங்கு என்ன தான் நடந்தது? என்பது தான், நேசிப்பாயா படத்தின் விறுவிறுப்பான, சுவாரசியமான, டிவிஸ்ட்டுகள் நிறைந்த திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

ஆகாஷ் முரளிக்கு இது முதல் படம்! வாழ்த்துக்கள் சொல்லி வரவேற்போம். ஹீரோவுக்கான தகுதிகள் அவரிடம் நிறையவே இருக்கிறது. அதை இயக்குநர் விஷ்ணு வர்த்தன் அழகாக பயண்படுத்தியிருக்கிறார். விரட்டி விரட்டி காதலிக்கும் போதும், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளிலும் அட்டகாசமாக நடித்து இருக்கிறார். க்ளைமாக்ஸ் நெருங்கும்போது ஜெயிலில் அதிதியை சந்தித்து பேசும் காட்சிகளில் கண்களில் நீரினை வரவழைத்து விடுகிறார்.

அதிதி ஷங்கர் சிறப்பாக நடித்திருக்கிறார். ரசிகர்களை எளிதில் ஈர்த்து விடுகிறார். நடிப்பினை வெளிப்படுத்த அவருக்கு அதிகமான காட்சிகள். அதை சாதகமாக பயண்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய இருப்பினை அழுத்தமாக் பதிவு செய்திருக்கிறார். போர்ச்சுக்கல் சிறை காட்சிகள், கல்லூரி பருவ காட்சிகளில் ஆகாஷூக்கும் அதிதிக்குமான காட்சிகள் ரசனையானவை.

கதையின் முக்கிய திருப்பங்களாக நடித்திருக்கும் சரத்குமார், குஷ்பூ, ராஜா மூவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் சரத்குமாரின் மிடுக்கான, கெத்தான தோற்றமும், சூப்பர். ஆனாலும் குஷ்பூ பெர்ஃபார்மென்ஸ், வாவ்!

பிரபு, ஸ்பெஷல்! நைஸ்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை, ஒளிப்பதிவாளர் கேமரூன் எரிக் பிரைசனின் ஒளிப்பதிவு இரண்டுமே படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில், பாடல்கள் திரும்பத் திரும்ப கேட்கலாம். பின்னணி இசை காட்சிகளுக்கு விறுவிறுப்பு சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கேமரூன் எரிக் பிரைசனின் ஒளிப்பதிவு, ஹாலிவுட் படங்களின் பாணியில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

தேவையற்ற சில காட்சிகளை நீக்கியிருக்கலாம். படத்தொகுப்பாளர் ஸ்ரீகர்பிரசாத் அதை நீக்காமல் விட்டிருக்கிறார்.

முதல் பகுதி ரொமேன்ஸ் கலாட்டா!, இரண்டாம் பகுதி ஆக்‌ஷன் கலாட்டா!, சூப்பர் யூகிக்க முடியாத சூப்பர் க்ளைமாக்ஸ்!

மொத்தத்தில், ‘நேசிப்பாயா’ 2 கே கிட்ஸ்களின் காதல் கலாட்டா!