‘ஹரி ஹர வீரமல்லு’:  பவன் கல்யாண் பாடிய பாட்டு!  

மெகா சூர்யா புரொடக்‌ஷன்  ஏ. தயாகர் ராவ் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம்,  ஹரி ஹர வீரமல்லு . இப்படத்தில் பவன் கல்யாண் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும்  இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் பாபி தியோல், சுனில், நிதி அகர்வால், மற்றும் நாசர் உட்பட பலர் நடித்துள்ளனர்.முகலாயப்பேர்ரசர் காலத்தில் வாழ்ந்த அரசர் அவுரங்கசீப் பற்றிய புனைவுக்கதை. நம் இந்திய வளங்களையும் நிலப்பரப்புகளையும் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் நம் நாட்டிற்குள் படையெடுத்து வந்த டச்சுக்காரர்களயும் மற்றும் போர்த்துகீசியர்களையும் எதிர்த்து ஓடவிட்ட ஒரு மாவீரனின் கதை தான் இந்த ஹரி ஹர வீரமல்லு. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள “கேக்கணும் குருவே” என்று தொடங்கும் முதல் பாடலை நடிகர் பவன் கல்யாண் பாடியுள்ளார். தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் கூட இவரது குரலே, மேம்பட்ட ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது,
இப்பாடலின் புரோமோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. பவன் கல்யாண், தனது வீரர்களுடன் சேர்ந்து, இரவு நேரத்தில் ஒரு சாகசப் பயணத்தைத் தொடங்கி, அங்கு ஒரு வலிமையான சவாலை எதிர்கொள்ளும் போது ஏற்படும் உனர்ச்சிக் கொந்தளிப்புகளின் இடையே , வீரர்களுக்கு உத்வேகம் கொடுக்கும விதமாக “கேக்கணும் குருவே” பாடல் இடம்பெற்றுள்ளது.பா.விஜய் எழுதிய இப்பாடலுக்கு எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.