தென்னிந்திய நடிகைகளின் பட்டியலில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, விக்கி கவுஷலுடன் இணைந்து நடித்துள்ள ‘சாவ்வா’ திரைப்படம் வரும்காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ராஷ்மிகா ஜிம்மில் உடற் பயிற்சி மேற்கொள்ளும் போது எதிர்பாராத விதமாக காலில் காயம் மற்றும் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காலில் கட்டு போடப்பட்ட நிலையில், படுத்த படுக்கையாக கிடக்கிறேன் என புகைப்படத்துடன் தனது வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில்,அவரை கண்டிப்பாக 3 மாதங்கள் படுக்கையில் ஒய்வு எடுக்க வேண்டும்என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையிலும், தனது சிகிச்சையை பொருட்படுத்தாமல், மும்பையில் நடந்த ‘சாவ்வா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு வீல் சேரில் வந்து கலந்து கொண்டார். வீல் சேரில் இருந்து ராஷ்மிகா நாயகன் விக்கியின் உதவியுடன் மேடைக்கு தத்தி தத்தி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.












