சாமியாராக மாறிய பிரபல நடிகை !
90 களில் பாலிவுட்டின் பிரபல கதாநாயகி நடிகையாக வலம் வந்தவர் மம்தா குல்கர்னி (வயது 52). இவர் வக்த் ஹமாரா ஹை (1993), கிராந்திவீர் (1994), கரண் அர்ஜுன் (1995), சப்சே படா கிலாடி (1995), அந்தோலன் (1995), பாஸி (1996), சைனா கேட் (1998) உள்ளிட்ட பல இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், திடீரென நடிப்புக்கு முழுக்குப்போட்டு மாயமான நடிகை மம்தா குர்கர்னி, தென்னாப்பிரிக்காவில் விக்கி கோஷ்வாமி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகச் செய்திகள் வெளியானது. விக்கி கோஷ்வாமி போதைப்பொருள் கடத்தும் தொழில் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் 2016 ஆம் ஆண்டு ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மம்தா குல்கர்னியின் பெயரும் சேர்க்கப்பட்டது. இப்போதைப்பொருள் தொடர்பாகக் கென்யாவில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் விக்கி கோஷ்வாமியுடன் மம்தா குல்கர்னியும் கலந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.இவ்வழக்கிலிருந்
இதை ‘கின்னர் அகாடா’விற்காக ஜுனா அகாடாவின் மூத்த துறவிகள் செய்து வைத்தனர். இந்த நிகழ்வு மாலை முடிந்த பின் ருத்ராட்ச மாலைகள் அணிந்து காவி உடையில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: ‘எனக்கு காளி மாதா கட்டளையிட்டபடி எனது புதிய குருவாக கின்னர் அகாடாவின் தலைவர் லஷ்மி நாராயண் திரிபாதியை ஏற்றுள்ளேன். முழுத்துறவறம் பூண்டதால் மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கப்பட உள்ளது.

இதற்காக எனக்கிட்ட நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டேன். கடந்த 23 வருடங்களாக நான் துறவறத்தில்தான் உள்ளேன். எனது ரசிகர்கள் ஆனைவரும் என்னை பாலிவுட்டிற்கு திரும்பும்படி வலியுறுத்துகின்றனர். ஆனால், நான் இதை ஏற்கப் போவதில்லை. மகா காளி உத்தரவின்றி எதுவும் நிகழாது’ என்று தெரிவித்தார்.இது குறித்து உத்தர பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நடிகை மம்தா குல்கர்னி வெள்ளிக்கிழமை (ஜனவரி 24, 2025) தனது உலக வாழ்க்கையைத் துறந்து ‘மை மம்தா நந்த கிரி’ என்ற புதிய அடையாளத்தைப் பெற்று ஆன்மீக பயணத்தைத் தொடங்கியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளது.
தனது துறவறத்திற்கு பின் கின்னர் அகாடாவின் மத்துரா முகாமில் தங்கி இந்துமதத்தை வளர்க்கப் பிரச்சாரம் செய்ய உள்ளார் மம்தா குல்கர்னி. துறவறம் மேற்கொண்ட பாலிவுட்டின் முதல் நடிகை மம்தா குல்கர்னி என்பது குறிப்பிடத்தக்கது.