“ஏன்டி விட்டுப் போன”… சிம்பு பாடிய ‘பிரேக்கப்’ பாடல்!
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ’டிராகன்’ விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.இது தொடர்பான புரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்பு, இசையமைப்பாளர் லியோ ஜேம்ஸ்,மற்றும் அஸ்வத் மாரிமுத்து ஆகிய மூவரும் உரையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ள இந்த வீடியோவில்,”நடிகர் சிம்பு, “இது என்ன மாதிரியான பாடல்? என கேட்க, இசையமைப்பாளர்லியோ ஜேம்ஸ், ‘ஏண்டி விட்டுப் போன’ என்ற பாடல்,” என கூற . அதற்கு சிம்பு “பிரேக்கப் பாடலா?” என்று கேட்க, இயக்குனரிடம் “பார்ட்டி சாங் என்று சொன்னீர்களே!” என்று கேட்டார். அதற்கு இயக்குனர் “நீங்கள் பாடினால் தமிழ்நாட்டுக்கே பார்ட்டிதான்! அதனால்தான் அப்படி சொன்னேன்,” என்று இயக்குனர் கூறினார்.உலகமே ‘ஏஐ’, ‘ரொமான்டிக்’ என போய் கொண்டிருக்கிறது,
நீங்க இன்னும் ‘லவ் பெயிலியர்’ பாடல் எடுத்துகிட்டு இருக்கீங்களா? நான் இந்த பாடலை பாட மாட்டேன்,” என்று சிம்பு கூறி வெளியே செல்ல முயல,இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து அவரை ஓடிப்போய் சமாதானம் செய்து அழைத்து வந்து, “உங்களுடைய அடுத்த படத்தின் இயக்குனர் நான், நான் சொல்கிறேன் பாடுங்கள்’ என்று கூற, சிம்பு, “நீ தானே என்னுடைய அடுத்த பட இயக்குனர்! அப்போ வா,உன்னை வச்சு செய்றேன்… இல்லை, இல்லை, கதற கதற வைக்கிறேன்,” என்று ஜாலியாக கூற , ஒருவரையொருவர் கலாய்த்து தள்ளும் இந்த புரோமோ வீடியோவுடன் தற்போது ’டிராகன்’ படத்திற்காக சிம்பு பாடிய,”ஏன்டி விட்டுப்போன” பாடல் வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.சிம்புவின் பிறந்த நாளான வரும் பிப்ரவரி 3ஆம் தேதி அவருடைய அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த தகவலை சிம்பு தனது சமூக வலைதளத்தில் உறுதி செய்து, புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.