சிம்புவின் 50 வது பட அறிவிப்பு!

நடிகர் சிம்பு,இயக்குனர் மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ போன்ற படங்களை இயக்கி உள்ள அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில்,ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், இன்றைய கால இளைஞர்களின் காதலைப் பற்றி பேசும் படமாக உருவாக உள்ளது.. இந்நிலையில்,  அவரது 49 வது படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது  வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு   தற்காலிகமாக  ‘எஸ்டிஆர் 49’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும், பிரபல தயாரிப்பு நிறுவனம் டான் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இப்படம் குறித்த அறிவிப்பு போஸ்டரில், சிம்பு மிகவும் ஸ்டைலாக  பின்புறமாக கைகளை காட்டியபடி நிற்க,அந்த கைகளில் இருக்கும் என்ஜினீரியிங்   புத்தகத்தின் உள்ளே மறைத்து ரத்தக்கறையுடன் கூடிய  கத்தியை  மறைத்து வைத்து இருக்கிறார்.அவரது பேண்ட் பாக்கெட்டில் அவர் படிக்கும் கல்லூரியின் ஐ.டி . கார்டும் தொங்க விடப்பட்டுள்ளது. இதன் மூலம் சிம்பு இந்த படத்தில் சிம்பு,என்ஜினியரிங் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சிம்புவின் பிறந்தநாள் அறிவிப்பாக அவரது 50 வது படஅறிவிப்பு அதிரடியாக வெளியாகியுள்ளது .

தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கவுள்ள இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். சரித்திர கதையாக உருவாகும் இப்படம் ஏற்கனவே கமல் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டு பின்னர் அதிலிருந்து விலகிய நிலையில்,தற்போது இப்படத்தை சிம்புவே தயாரிக்கிறார்.விரைவில் இப்படத்தின் தலைப்பு உள்ளிட்ட விபரங்கள் வெளியாகும் என தெரிகிறது.