நயன்தாராவுக்கு இரட்டை பெண்குழந்தைகள்! விக்னேஷ் சிவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!!
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நடிகை நயன்தாரா, கடந்த 2022-ம் ஆண்டு அவரை கரம்பிடித்தார். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகிவிட்டதாக அறிவித்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிவிப்புக்கு பின்னர் தான் அவர் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த தகவல் வெளியானது. தற்போது நயன்தாராவின் மகன்கள் உயிர், உலக் ஆகியோருக்கு இரண்டு வயது ஆகிறது. மகன்கள் நடக்கத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், ஒரு வீடியோவை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
அந்த வீடியோவில் நயன்தாரா இரட்டை பெண் குழந்தைகளுடன் இருக்கிறார்.இந்த வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், சில நேரங்களில் ஏஐ-யும் ரொம்ப க்யூட்டாக உள்ளது என குறிப்பிட்டு அந்த வீடியோவுக்கு ஹார்ட்டை பறக்கவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவில் விக்னேஷ் சிவனையும் சேர்த்திருந்தால் அழகாக இருந்திருக்கும் என பதிவிட்டு வருகின்றனர்.