மிக மிக ‘ஒல்லி’யாக மாறிய நடிகர் அஜித்!
நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 6-ந் தேதி ‘விடாமுயற்சி’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் தனது 63-வது படமான ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படங்களை தொடர்ந்து நடிப்புக்கு சின்னதாக இடைவெளி விட்டு, கார்பந்தயங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார். கார் பந்தய போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் பயிற்சி பெறுவதற்கும் வசதியாக அஜித் துபாயில் தற்போது செட்டில் ஆகிவிட்டார். இதற்கிடையில், துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்தின் அணி 992 பிரிவில் 3வது இடத்தை வென்றது.. அதனை தொடர்ந்து போர்ச்சுகலில் நடைபெற உள்ள கார் ரேஸில் அஜித் கலந்து கொள்ள உள்ளார். இந்த கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக அஜித் தனது உடல் எடையை கணிசமாக குறைத்து வருகிறார். அதற்காக தீவிரமான பயிற்சியிலும் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அஜித்தின் உடல் எடை குறைத்து மிக மிக ஒல்லியாக தோன்றும் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.