மூன்று பேரின் வாழ்வை மாற்றி அமைக்கும் ‘டெஸ்ட்!
‘விக்ரம் வேதா’, ‘இறுதி சுற்று’ ‘மண்டேலா’ உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரான எஸ்.சஷிகாந்த் ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.கிரிக்கெட் மைதானம், மூன்று பேரின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஒரு முடிவை எப்படி எடுக்க வைக்கிறது என்பது தான் ‘டெஸ்ட்’படத்தின் கதை . இதில் மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோருடன் மீரா ஜாஸ்மினும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வரும் ஏப்ரல் 4 அன்று ஓடிடி தளத்தில் வெளியாகும் இப்படம் குறித்து இயக்குநர் சஷிகாந்த் கூறுகையில்,, “பல ஆண்டுகளாக ஒரு தயாரிப்பாளராக நல்ல படங்களைத் தயாரித்துவிட்டு தற்போது ‘டெஸ்ட்’ படத்திற்காக இயக்குநர் நாற்காலியில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியாகவும் தனிப்பட்ட முறையில் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. இப்படம் பல உணர்வுகள், சூழ்நிலைகளின் முடிவு, வாழ்க்கை எப்படி அனைவருக்கும் சில சோதனைகளைத் தருகிறது என்பதைத்தான் ‘டெஸ்ட்’ பேச இருக்கிறது. ” என்கிறார்.