‘வாடிவாசல்’ ; இசையமைப்பு வேலைகள் தொடங்கியது!

சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில்,  கலைப்புலி எஸ். தாணு கூட்டணியின்  ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் முதல் கட்ட  படப்பிடிப்பு பணிகள் தற்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
 விடுதலை 2 படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படவேலைகளை தற்போது தொடங்கியுள்ளார் . முதல் கட்டமாக இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து இப்படத்தின் பாடல்களை உருவாக்கும் பணிகளை நேற்று முதல் தொடங்கியுள்ளார். இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஜி.வி. பிரகாஷ் குமார், வாடிவாசல் படத்தின் கம்போஸிங் பணிகள் தொடங்கி விட்டன என்றும் பதிவிட்டு, சூர்யா,வெற்றிமாறன்  ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார்.நடிகர் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வரும் தனது 45 படத்தின் படப்பிடிப்பை இம்மாத த்திற்குள் முடித்துவிட்டு அடுத்த மாதம்   வாடிவாசல் படத்தில் இணைந்து விடுவார் என தெரிகிறது.