ராதிகா சரத்குமாருக்கு நடந்த அறுவை சிகிச்சை!
சமீபத்தில் நடிகை ராதிகா சரத்குமாருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருக்கிறது. இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ராதிகா கூறியுள்ளதாவது, “கடந்த இரண்டு மாதங்களாக நான் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். இரண்டு படங்களில் வேலை செய்தேன். அப்போது எனது முழங்காலில் அதீத வலி இருந்தது. வலி நிவாரணி மாத்திரைகள், முழங்கால் பிரேஸ் உள்ளிட்டவைகளை வைத்து சமாளித்தேன். ஆனால் ஒருகட்டத்தில் அறுவை சிகிச்சைதான் ஒரே வழி என்றானது. அதன்படி அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அப்போது எனது தோழி என்னிடம், ‘நீங்கள் அறுவை சிகிச்சை செய்ததற்கும், படங்களை முடித்துக்கொடுத்ததற்கும் நன்றி சொல்வார்கள் என்று நம்புகிறேன்’ என கூறினார். ஆனால் நான் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. எனது கவனம் எல்லாம் வேலையில் மட்டும்தான் இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தன்னை அதிகம் நேசித்து, தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என இந்த மகளிர் தினத்தில் விரும்புகிறேன். எனக்கு அறுவை சிகிச்சை முடிந்த பிறகு எனது கணவர் சரத்குமார் என்னை ஒரு குழந்தையைப் போல் கவனித்துக்கொண்டார். மகளிர் தின வாழ்த்துகள்.. வலிமையாக இருங்கள்” என்று உருக்கத்துடன் குறிப்பிடத்தக்கது.