‘ஒய் நாட் ஸ்டுடியோ’ தயாரிப்பில், எஸ்.சசிகாந்த் இயக்கத்தில், மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் புதிய படம், ‘டெஸ்ட்’. இப்படத்தின் மூலம் பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. ‘ஏரேனா’ எனத்தொடங்கும் யோகி பி எழுதி பாடிய இந்த உற்சாகமூட்டும் பாடல், உலகமே ஒரு அரங்கம், நாம் அதில் இறங்க வேண்டும், போராட வேண்டும், வெற்றிக்காக முயற்சிக்க வேண்டும்.என வெற்றிக்கான போராட்டத்தின் சித்தாந்தத்தை வெளிப்படுத்துகிறது. பாடலின் வரி வீடியோ இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு சமர்ப்பணமாக உருவாக்கப்பட்டுள்ளது—அந்த விளையாட்டின் உண்மையான கிளாடியேட்டர்களான—அவர்கள், கிரிக்கெட் மற்றும் நம் நாட்டிற்காக செய்த அற்புதமான பங்களிப்பை கொண்டாடுகிறது.தமிழ் திரையுலகில் 2013 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘காதல்’ படத்தில் ‘நெஞ்சுக்குள்ளே’ பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார் சக்திஸ்ரீ . தொடர்ந்து மெட்ராஸ், ராஜா ராணி,விக்ரம் வேதா,’ பொன்னியின் செல்வன்-2 உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார்