‘பெருசு’ – (விமர்சனம்.) வாங்க சிரிக்கலாம்!
தஞ்சாவூர் பக்கம் உள்ள ஒரு கிராமம். அந்த ஊரில் மதிப்புமிக்க பெரியவர். அவருக்கு இரண்டு மகன்கள். அவரின் மூத்த மகன், அந்த ஊர் பள்ளியின் தலமை ஆசிரியர். இளைய மகன் பொறுப்பில்லாமல் சுற்றித்திரியும் குடிகாரன்.
ஒருநாள் அந்தப்பெரியவர் காலையில் ஆற்றங்கரையோரம் நடந்துவருகிறார். அப்போது ஒரு சிறுவன், பெண்கள் குளிக்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கிறான். அதைப்பார்த்த, அந்தப்பெரியவர் சிறுவனனின் கண்ணத்தில் அறைந்து விடுகிறார். அதற்கு பழி வாங்க அந்த சிறுவன், அவரை பின் தொடர்கிறான். இந்நிலையில், டிவி பார்த்துக்கொண்டிருந்த நிலையில், அந்தப்பெரியவர் இறந்து விடுகிறார். குடும்பத்தினர், மக்கள் முன்னிலையில், அவருக்கு இறுதி மரியாதை செய்ய முடியாத அளவிற்கு, அவரது உடலில் மாற்றம் ஏற்படுகிறது. வெளியே தெரிந்தால் பெருத்த அவமானம் என கருதும் அவரது குடும்பத்தினர் என்ன செய்தனர். என்பது தான் பெருசு படத்தின், சற்றே கலகலப்பான, ஒடிடிக்கு ஏற்ற, அடல்ட்ஸ் ஒன்லி காமெடிக் கதை.
வைபவ், எப்போதும் மது போதையில் இருக்கும் கதாபாத்திரத்தில், சில காட்சிகளில் மிகையான நடிப்பினை கொடுத்திருந்தாலும், கச்சிதமாக நடித்திருக்கிறார். வைபவின் மனைவியாக நடித்திருக்கும் நிஹாரிகா, ஓகேவான நடிப்பினை கொடுத்திருக்கிறார்.
சுனில், வீட்டின் மூத்த மகனாக பிரச்சனைகளை சுமூகமாக கையாளுபவராக, பொறுப்பானவராக அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து, சிறப்பு சேர்த்திருக்கிறார். சுனிலின் மனைவியாக நடித்திருக்கும் சாந்தினி, கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்திருக்கிறார். ‘பெருசு’ சை பார்க்கும்போது அவரது ரியாக்ஷன், பாக்யராஜை நினைவு படுத்துகிறது.
பாலசரவணன், முனீஷ்காந்த் ஆகியோரது கூட்டணி, சிரிக்க வைக்கிறது. அதேபோல், ரெடிங் கிங்ஸ்லியின் ‘ம்ம்ம்’, ரியாக்ஷன் சிரிக்க வைக்கிறது.
விடிவி கணேஷ் , தனம், தீபா, கஜராஜ், சுவாமிநாதன், கருணாகரன் என அனைவரும் நன்றாகவே நடித்துள்ளனர். நக்கலைட்ஸ் தனம், சிறப்பு கவனம் பெறுகிறார். ஓவராக்டிங் தீபா கூட சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
பெருசுவிடம் அடி வாங்கி, அவரை பழிவாங்கத் துடிக்கும் இளைஞர் சூப்பராக நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸில், பெருசு அடித்த காரணத்தை அந்த இளைஞன் கூறுபோது, குபீர் சிரிப்பு ஏற்படுகிறது!
ஒளிப்பதிவு சத்யா திலகம், படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.
இசையமைப்பாளர் அருண் ராஜின் இசை, பின்னணி இசை ஓகே!
பாலாஜியின் வசனங்கள், இன்னும் வலுவாக இருந்திருக்க வேண்டும்.
திரைக்கதையை, முழுக்க முழுக்க நகைச்சுவையாக நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குநர், அதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
‘பெருசு’, சிரிக்கலாம்!