எனக்கு ஏதாவது நடந்தால்…. நடிகை பாவனா பரபரப்பு பேட்டி!
தமிழில் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான பாவனாவுக்கு தொடர்ந்து, வெயில், கூடல் நகர், தீபாவளி, ராமேஸ்வரம், ஆர்யா,கிழக்கு கடற்கரை சாலை என வரிசையாக தமிழில் பிசியாந நடிகையானார்.தொடர்ந்து அஜித்துக்கு ஜோடியாக அசல் படத்தில் நடித்த பாவனா, தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக அமையாததால் மலையாள திரையுலகிற்கு தாவி சில படங்களில் நடித்து வந்தார். அவருக்கு சில வருடங்களுக்கு முன்பு பாலியல் ரீதியாக நடந்த விரும்பத்தகாத நிகழ்வு ஒன்றில் மலையாள நடிகர் திலீப்குமார் கைதும் செய்யப்பட்டார். இந்நிலையில் தனக்கு நடந்த விவகாரம் குறித்து தற்போது யூடியூப் சேனல் ஒன்றில் மனம் திறந்துள்ளார் அதில், “அசல் படத்துக்கு பிறகு ஏன் எனக்கு தமிழில் வாய்ப்புகள் வரவில்லை என்று தெரியவில்லை.எனக்கு அந்த சம்பவம் நடந்தபோது (பாலியல் தொல்லை சம்பவம்) நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதனால்தான் உடனடியாக நான் காவல் துறையில் புகார் கொடுத்தேன். நான் எந்தத் தப்பும் செய்யாதபோது ஏன் பயப்பட வேண்டும். இதை செய்தால் இது நடக்கும்; அதை செய்தால் அது நடக்கும் என்றெல்லாம் நான் யோசித்ததே இல்லை. அப்போதைக்கு எது சரி என்று பட்டதோ அதனைத்தான் நான் செய்தேன். அந்த சம்பவம் நடப்பதற்கு முன்னர் நான் சில படங்களில் கமிட்டாகியிருந்தேன். ஆனால் அந்த சம்பவத்துக்கு பிறகு மனரீதியாக நான் நார்மலாக இல்லை. என்னால் சகஜமாக இருக்க முடியவில்லை. அதனால் நான் ஷூட்டிங் செல்லாமல் இருந்தேன். அந்த சமயத்தில் நான் பிருத்விராஜுடன் ஒரு படத்தில் கமிட்டாகியிருந்தேன். அவரிடமும், இயக்குநரிடமும் வேறு யாரையாவது வைத்து இந்தப் படத்தை உருவாக்குங்கள் என்று சொன்னேன்.
ஆனால் அவர்களோ அதெல்லாம் இல்லை நீங்கள் எப்போ நார்மலாகி ஓகே சொல்கிறீர்களோ அப்போது ஷூட்டிங்கை வைத்துக்கொள்வோம் என்று சொனனர்கள். அவர்களால்தான் நான் மீண்டும் சினிமாவுக்கு நடிக்க வந்தேன். நான் மென்ட்டலியாக பலமானவள் கிடையாது. எனக்கு நிறைய விஷயங்களை பார்த்தால் பயம்தான் வரும். உதாரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் பயமாக இருக்கும். புதுப்படங்கள் கமிட் செய்வதற்கு பயமாக இருக்கும். இப்போதைக்கு சமூகத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதுகூட எனக்கு தெரியாது. சில வாரங்கள் கழித்துதான் எனக்கு அது தெரியவரும். அதையெல்லாம் தெரிந்துகொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். அதேபோல் எனக்கு ஏதாவது நடந்தால் வெளியில் யாரிடமும் சொல்லிக்கொள்ளமாட்டேன்” என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.