‘காதல் தோல்வி’ தமன்னா பரபரப்பு பதிவு!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக மாறியுள்ள நடிகை தமன்னா,கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தி  நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார்.இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில்  வைரலானது. மேலும் இவர்களின் திருமணம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவித்துவிட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் . காதல் தோல்விக்காக தங்களது நண்பர்களுக்கு தனித்தனியாக இருவரும் விருந்து வைத்தாகவும் தகவல்  வெளியாகி ரசிகர்களுக்கு அதிச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது காதல் தோல்விக்கு பின் தமன்னா வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இப்பதிவில்   ” வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் என எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். நாம்தான் அற்புதங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்” என அவர் பதிவு செய்துள்ளார்.