கார்த்தி “சதுரங்க வேட்டை“ புகழ் வினோத் இயக்கிவரும் “தீரன் அதிகாரம் ஒன்று“ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கார்த்தி கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு “ ஜெய்சல்மர் “ “பூஜ்“ பகுதியில் தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும். யதார்த்தமானலொக்கேஷனாக இருப்பதால் இப்பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதாக ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் கூறினார். எங்கள் கதைக்கு என்ன தேவையோ அது எங்களுக்கு இங்கே சரியாக கிடைத்துள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வருகிறது. “பூஜ்” பகுதியில் ஆக்சன் காட்சிகளை பரபரப்பாக படமாக்கவுள்ளோம். ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனின் ஸ்டன்ட் அமைப்பில் “ஹை வே“ ஆக்சன் காட்சி ஒன்றும் படமாக்கப்படவுள்ளது. மொத்தம். இங்கே 40 நாட்கள் படபிடிப்பாகும் இப்படம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்கிறார்ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.