சித்தார்த்தை திருமணம் செய்து கொண்டது ஏன்?- மனம் திறந்த அதிதி ராவ்.
நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், கடந்த வருடம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.இந்நிலையில் அதிதி ராவ் தனது திருமணம் குறித்தும் சித்தார்த் குறித்தும் கூறியுள்ளதாவது, “அவரை திருமணம் செய்துகொள்ள நான் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. அவர் அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர். அவரிடம் செயற்கையாக எதுவும் இல்லை. நீங்கள் பார்ப்பது போல தான் அவர். மிகவும் அன்பானவர்.எனக்கு நெருக்கமானவர் என ஒருவரை பற்றி தெரிந்தால், அவர்கள் எல்லோரையும் ஒன்றாக வரவைத்துவிடுவார். அப்படிதான் நான் வளர்ந்தேன், அது எனக்கு நிஜமாகவே பிடிக்கும் “ஹீராமண்டி படத்திற்கு கிடைத்த பாராட்டுகளை பார்த்தபோது அடுத்து எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரும் என தோன்றியது.”ஆனால் அதன்பின் வாய்ப்பே வரவில்லை.”அந்த நேரத்தில் தான் நாங்கள் திருமணத்தை முடித்துவிட்டு அதன் பின் நடிக்கலாம் என போய்விட்டேன்” என அதிதி கூறி இருக்கிறார்.