ஜெயலலிதாவை விமர்சித்தது ஏன்? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்!
சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும் , சத்யா மூவிஸின் நிறுவனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான .இராம வீரப்பன் குறித்த ஆவணப்படம் மிக பிரம்மாண்டமாகவும் வரலாற்றில் நாம கவனிக்க தவறிய முக்கிய நிகழ்வுகளை நம் கண்முன் நிறுத்தும் விதமாக மிக நேர்த்தியாகவும் தயாராகி வருகிறது .
Related Posts
தமிழகத்தின் அரசியல் மற்றும் திரையுலக வரலாற்றில் முக்கிய ஆளுமையாக இருந்த ஐயா அவர்களின் ஆவணப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில், சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் உள்ளிட்ட திரையுலகத்தின் முன்னணி பிரபலங்கள் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சிகளையும் சார்ந்த பல தன்னிகரற்ற அரசியல் தலைவர்கள் என அனைவரும் இதில் பங்கேற்று அவருடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து சிறப்பு செய்துள்ளனர் .
இந்நிலையில்,,மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று, ‘ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர்’ என்ற ஆவணப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
இதில் நடிகர் ரஜினிகாந்த் ஆர்.எம்.வீரப்பன் குறித்த நினைவுகளை பகிர்ந்து பேசும் போது , ‘பாட்ஷா விழாவில், ஆர்.எம்.வீ தயாரிப்பாளராக மேடையில் இருந்தார். வெடிகுண்டு கலாசாரத்தை பற்றி நான் பேசினேன். அமைச்சரை வைத்துக்கொண்டே அதை பற்றி பேசி இருக்கக்கூடாது. ஆனால் பேசி விட்டேன். அப்போது எனக்கு அந்தளவுக்கு தெளிவு இல்லை. அப்போது அவர் அதிமுகவில் அமைச்சராக இருந்தார். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவரை பதவியில் இருந்து தூக்கிவிட்டார். அது தெரிந்ததும் நான் ஆடிபோய் விட்டேன். என்னால் தானே இப்படி ஆகிபோனது என்று எனக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை.கலையில் போன் பண்ணி மன்னிப்பு கேட்டேன், ஆனால் அவர் எதுவுமே நடக்காதது போல், அதைப்பற்றியெல்லாம் யோசிக்காதீர்கள், பதிவிதானே போனது, நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் என்று சர்வசாதாரணமாக சொன்னார். ஆனால், அது தழும்பு போல என்னை விட்டு போகவில்லை, போகாது.ஜெயலலிதாவுக்கு எதிராக நான் குரல் கொடுத்ததற்கு சில காரணங்கள் இருந்தால்கூட, இந்த காரணம் முக்கியமானது. இதுகுறித்து ஜெயலலிதாவிடம் நான் பேசுவதாக ஆர்.எம்.வி.யிடம் கூறினேன். ஆனால், ஜெயலலிதா ஒரு முடிவெடுத்தால் மாற்ற மாட்டார், அவரிடம் பேசி உங்கள் மரியாதையை நீங்கள் இழக்க வேண்டாம். அப்படி சொல்லி அங்கு சேர வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துவிட்டார் ” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.