மீண்டும் கார் ரேஸில் சீறிப்பாயும்அஜித்குமார்!

அஜித்குமார் சினிமாவில் மட்டுமல்லாமல் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். சர்வதேச அளவில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்து வருகிறார். இதற்கென தனியாக அவர் தலைமையில் ‘அஜித் குமார் ரேசிங்’ அணி ஒன்றை யம் தொடங்கியுள்ளார்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், 24எச் துபாய் 2025 நிகழ்வின் 991 பிரிவில் அவர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். அதைத் தொடர்ந்து இத்தாலியில் நடந்த தீவிரமாகப் போட்டியிட்ட 12எச்  முகெல்லோ கார் பந்தய நிகழ்வில் அவர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.இந்நிலையில்,அஜித் நடிப்பில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி வந்த   ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில்,இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் கிடைக்கும் ஒய்வு நேரங்களில் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில்,ஏற்கனவே  வரும் அக்டோபர் மாதம் வரை படங்களில் நடிக்காமல் கார் பந்தயங்களில் கலந்து கொள்ளவிருப்பதாக அஜித்  தெரிவித்திருந்த நிலையில், ஜி டி 4 ஐரோப்பிய கார் பந்தய தொடரில் பங்கேற்பதற்காக  நடிகர் அஜித் குமார் தொடர்ந்து தயாராகி வந்த நிலையில், தற்போது கடந்த 9 ம் தேதி ஐரோப்பா புறப்பட்டு சென்றுள்ளார். ஜிடி 4  தொடர் என்பது ஐரோப்பாவின் புகழ்பெற்ற சுற்றுகளில் போட்டியிடும் ஜிடி 4 -ஸ்பெக் வாகனங்களைக் கொண்ட ஒரு முதன்மையான ஸ்போர்ட்ஸ் கார் சாம்பியன்ஷிப் ஆகும். அஜித் அடுத்ததாக பிரான்சில் உள்ள பால் ரிக்கார்ட் சர்க்யூட்டில் பங்கேற்கிறார், அங்கு அவரது பந்தயம் ஏப்ரல் 11 முதல் 13 வரை நடைபெற உள்ளது. பின்னர் மே 16-18 வரை நடைபெற உள்ள ஜான்ட்வோர்ட் சர்க்யூட்டில் நடைபெறும் பந்தயத்தில் அவர் பங்கேற்பார்.தொடர்ந்து  ஜூன் 26 முதல் 29 வரை ஸ்பா சர்க்யூட்டிலும், ஜூலை 18 முதல் 20 வரை மிசானோ சர்க்யூட்டில் நடக்கும் பந்தய போட்டிகளிலும் அஜித் பங்கேற்கிறார்.

நடிகர் அஜித்குமார் ரேஸிற்காக போர்ஷோ நிறுவனத்தின் 911 ஜி3 கப் 992 ரக காரை பயன்படுத்தியுள்ளார். இந்த கார் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே சிவப்பு மற்றும் ஆரஞ்ச் நிற டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.பயிற்சி துவங்குவதற்கு முன்னர் இவர் காரை சோதனை செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த கார் பிரத்தியேகமாக ரேஸ் பயன்பாட்டிற்காக மாற்றியமைக்கப்பட்ட காராக இருக்கிறது. இநத் வீடியோ வைரலாக பரவி வருகிறது.