இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி ‘திடீர்’ மரணம்!

கேரள மாநிலத்தில் 1967ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் நாள் பிறந்த இவர் கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். சினிமா மீது கொண்ட பற்றின் காரணமாக  இயக்குனர்கள்  மகேந்திரன் மற்றும் சசியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய  எஸ்.எஸ்.ஸ்டான்லி ,  ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.தொடர்ந்து  
தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி (வயது 60) . பின்னர் நடிப்பிலும்  கவனம் செலுத்த தொடங்கி,  பெரியார், ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்கார், மகாராஜா உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானார். இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி திருமண மாகதவர். சென்னை வளசரவாக்கத்தில் சவுத்திரி நகர் கேசவர்த்தினி  பின்புறமுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்தார் இந்நிலையில்
கடந்த சில வருடங்களாகவே  சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவரது மருத்துவ சிகிச்சைக்கு நடிகர் தனுஷ் உதவி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால்  சிகிச்சை பலனின்றி இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, இன்று காலைஉயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இன்று மாலை 4 மணிக்கு சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் எஸ்.எஸ்.ஸ்டான்லியின் இறுதி சடங்குகள்  நடந்தது இதில் திரையுலகினர் பலர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர் .எஸ்.எஸ்.ஸ்டான்லியின் மரணம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.