3வது முறையாக கார் விபத்தில் சிக்கிய அஜித் குமார்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான
‘குட் பேட் அக்லி’ திரைப்படம், அவரது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசிற்கு தயாராகி வருகிறார். அவர் தற்பொழுது ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவுள்ளார். அதற்கான கார் பயிற்சியில் அஜித் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் நடிகர் அஜித் குமார் ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தய போட்டியின் போது மூன்றாவது முறையாக விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்துக்கு பின் அஜித் நடந்து வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது இதையடுத்து நல்வாய்ப்பாக அவருக்கு பெரிதாக காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முன்னதாக துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் அவரது அணி 3-வது இடம் பிடித்தது. முன்னதாக அவர் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கினார். அதில் காயம் ஏதுமின்றி உயிர்தப்பினார்
.இதையடுத்து ஸ்பெயினின் வலென்சியா நகரில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டார். அப்போது முந்தி செல்ல முயன்ற பொழுது மற்றொரு கார் குறுக்கே வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. கார் குறுக்கே வந்ததால் அஜித் இயக்கிய கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக நடிகர் அஜித் உயிர் தப்பினார். இந்நிலையில் தற்போது அஜித் ஜிடி ஃபோர் ஐரோப்பிய சீரிஸ் கார்பந்தய போட்டியில் கலந்து கொண்ட போது விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.