Monday, May 12, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது! ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்!!

admin by admin
April 28, 2025
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜன.25ம் தேதி அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதில் நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்திருந்தது.மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லியில், இன்று மாலை நடைபெறும் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க நடிகர் அஜித்குமார் நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றார். இந்நிலையில் விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பத்மபூஷன் விருதுகளை வென்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். நந்தமுரி பாலகிருஷ்ணா, அஜித் குமார், சேகர் கபூர், அரிஜித் சிங் மற்றும் ரிக்கி கேஜ் போன்ற பிரபலங்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் விருதுகளைப் பெற்றனர்.

விருது வாங்கிய அஜித்துக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இருவரும் அஜித்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

You might also like

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!

மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!

நயினார் நாகேந்திரன் கூறியதாவது ” அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, கார் பந்தயம், துப்பாக்கிச் சுடுதல், பைக் சுற்றுப்பயணம் என தனக்குப் பிடித்த துறைகளிலும் தனி முத்திரை பதித்து, இன்று கலைத்துறையில் பெரும் சாதனைகள் படைத்ததற்காக மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றிருக்கும் திரு. அஜித் குமார் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் இன்று நாட்டின் உயரிய விருதைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள திரு. அஜித் குமார் அவர்கள் கலைத்துறை மட்டுமன்றி பிற துறைகளிலும் மென்மேலும் பல சாதனைகள் படைத்து இளைஞர்களுக்கு தொடர்ந்து ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்” எனவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

admin

admin

Related Posts

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!
News

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
May 12, 2025
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!
News

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!

by admin
May 12, 2025
மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!
News

மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!

by admin
May 12, 2025
ஜூலை 10 ஆம் தேதி வெளியாகும் “ப்ரீடம்” !
News

ஜூலை 10 ஆம் தேதி வெளியாகும் “ப்ரீடம்” !

by admin
May 12, 2025
ஏ ஆர், ரகுமான்- பிரபுதேவா கூட்டணியின் ‘மூன்வாக்’.: தட்டித் தூக்கிய ரோமியோ பிக்சர்ஸ் !!
News

ஏ ஆர், ரகுமான்- பிரபுதேவா கூட்டணியின் ‘மூன்வாக்’.: தட்டித் தூக்கிய ரோமியோ பிக்சர்ஸ் !!

by admin
May 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?