இசை நாயகன் ‘பால் டப்பா’ நடிகராக அறிமுகமாகிறார்.!
இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு என இருமொழிகாலைல உருவாகும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தின் முக்கியமான அப்டேட்டை ரஃப் நோட் ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது., தற்போதைய இசை உலகில் கவனம் பெற்று வரும் நட்சத்திரம் ‘பால் டப்பா’ இப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார்.சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிஷ், ஒரு பன்முக கலைஞர் – ரேப்பர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடன இயக்குநர். 170 சி எம் , காத்து மேல, மற்றும் வைரலான கலாட்டா (ஆவேஷம் திரைப்படத்தில் இருந்து) போன்ற ஹிட் பாடல்களின் மூலம், இசை உலகில் தனக்கென தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.குழந்தைப் பருவத்தில் குளிர்ந்த பாலை நேசித்ததைத் தலைப்பாக வைத்து, “பால் டப்பா” என்ற பெயரின் மூலம் தன் தனித்துவத்தை வெளிப்படுத்தியவர். இப்போது, அவரின் புதிய பயணமாக சினிமா உலகில் நடிகராக களமிறங்கியுள்ளார்இது குறித்து இயக்குநர் விஜய் மில்டன் கூறும்போது, “பால் டப்பாவிடம் இருக்கும் இயல்பான, இளைஞர்களை உற்சாகப்படுத்தும் ஆற்றல் இந்தப் படத்தின் உணர்வுகளோடு பொருந்துகிறது. அவர் உண்மையாக வாழும் கலைஞர்; அந்த நேர்மையே இந்த கதாபாத்திரத்திற்கு தேவை,” என தெரிவித்துள்ளார்.