மாதம் ரூ. 40 லட்சம்: ரவி மோகனிடம் ஜீவனாம்சம் கேட்ட ஆர்த்தி! பரபரப்பு தகவல்கள் !!
நடிகர் ரவி யோகன் பிரபல படத்தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்,
இந்நிலையில்,தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி மோகன் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த 3-வது குடும்ப நல நீதிமன்றம், இருவரும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி சுமூக பேச்சுவார்த்தை நடத்துமாறு உத்தரவிட்டது. அதன்படி, ரவியும், ஆர்த்தியும் ஆஜராகி ,. இதுவரை 3 முறை சுமூக பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளனர். இதையடுத்து சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்து அது தொடர்பான இந்த வழக்கு நீதிபதி தேன்மொழி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
முதலாவது குடும்ப நீதிமன்றத்தில் இன்று இருவரும் நேரில் ஆஜர் ஆகினர். ரவி மோகன் தரப்பில் செய்யப்பட்டுள்ள மனுவில், “ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து அளிக்க வேண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆர்த்தியின் கோரிக்கை நிராகரிக்க வேண்டும்” என கூறப்பட்டு இருந்தது.ஆர்த்தி தரப்பில் ,”மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சமாக நடிகர் ரவி வழங்க வேண்டும்” என்ற கோரிக்கை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களுக்கு ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி தேன்மொழி உத்தரவிட்டு , வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.