கமல் பெயரில் படம் எடுக்கும் கன்னட அமைச்சர்.!

கர்நாடக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என். சலுவராய சாமி. இவரின் மகன் சச்சின் சலுவராயன் . நடிகர் . 

மகனை முன்னணி நடிகராக்கும் முயற்சியில் இருக்கும் அமைச்சர் ,சொந்தமாக படம் எடுகக முடிவு செய்து களத்தில் இறங்கிவிட்டார். 

உலகநாயகன் கமலின் தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருப்பது  கன்னட திரைப்பட வர்த்தக சபை .  பக்க பலமாக  சில கன்னட மொழி வெறி அமைப்புகள். பிரச்சனை கோர்ட்டில் இருக்கிறது. 

இந்த சூழ்நிலையில்தான் சலுவராயசாமி கமலின் பெயரில் திரைப்படம் எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

கமல் ஸ்ரீதேவி என்பது படத்தின் டைட்டில் . நாயகியாக சங்கீதா பட். கமலாக நடிப்பது மகன் சச்சின் சலுவராயன் 

கமல்ஹாசனின் பெயரை பயன் படுத்த அனுமதி வாங்கினாரா இல்லையா என்பது தெரியவில்லை. தக் லைஃப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் உலகநாயகனின் பெயரை பயன்படுத்தி முன்னுக்கு வரத்  துடிப்பது கமலின் செல்வாக்கு உயர்வை காட்டுகிறது.