நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் காலமானார் !

தமிழ் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான வில்லன் நடிகரான கோட்டா ஸ்ரீனிவாச ராவ். தமிழில் வெளிவந்த சாமி, திருப்பாச்சி. கோ, சகுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கோட்டா சீனிவாச ராவ். பத்மஸ்ரீ மற்றும் நந்தி விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். .

இந்நிலையில்,கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். அவரது வயது 83 ஆகும். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை தமிழ் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.