6 மாத கர்ப்பம்…. அவசர அவசரமாக நடந்த மாதம்பட்டி ரங்கராஜின் 2 வது  திருமணம்!

பிரபல சமையல் கலைஞர்  மாதம்பட்டி ரங்கராஜ்,கடந்த 2019-ம் ஆண்டு வெளியான மெஹெந்தி சர்க்கஸ் படத்தின் மூலம்  கதாநாயகனாகவும் அறிமுகமாகியிருந்தார். பின்னர் பென்குயின் என்ற படத்திலும் நடித்துள்ளார் இந்நிலையில் இவர் சமையல் மற்றும்  சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் கட்டி வருகிறார் மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக வலம் வருகிறார்.
இவருக்கு ஏற்கனவே முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசல்டாவுடன் லிவிங் டூகெதர் பாணியில் வாழ்ந்து வருவதாக  கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஜாய் கிரிசல்டாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.இவர்களது திருமணம் கோவிலில் கவும் எளிமையாகவும் பாரம்பரிய முறையிலும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.  சினிமா பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக  பணியாற்றி வரும்  திரைப்படங்களுக்கும்  காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாய் கிரிசில்டா திருமண செய்தியை பகிர்ந்துள்ளதோடு , ரங்கராஜை “மை மேன்” எனக் குறிப்பிட்டுள்ளார் .அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
இதன் காரணமாகவே தற்போது இவர்களது திருமணம் அவசர அவசரமாக நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தற்போது சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.