கோவாவில் ஒன்று கூடிய சினிமா நட்சத்திரங்கள்!
தமிழ்த்திரையுலகில் 90களின் மிகவும் புகழ்பெற்ற நடிகர் நடிகைகள்உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இந்தியாவின் ‘மினி தாய்லாந்து’, ‘பார்ட்டி நகரம்’ என்று அழைக்கப்படும் கோவாவில் ஓன்று கூடினர்.
மகிழ்ச்சியான , துடிப்பான நினைவலைகளின் பயணமாக அமைந்த இந்நிகழ்வில், 90களில் வெள்ளித்திரையை ஆக்கிரமித்த நடிகைகள் மீனா, சிம்ரன், சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமா சென், மகேஸ்வரி மற்றும் சிவரஞ்சனி ஆகியோரும், மூத்த இயக்குநர்களான கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர், லிங்குசாமி, மோகன் ராஜா மற்றும் நடன இயக்குநரும் இயக்குநருமான பிரபு தேவா ஜெகபதி பாபு மற்றும் மேகா ஸ்ரீகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கோவாவில், கடற்கரை சந்திப்புகள் முதல் பொன்னான திரைப்பட நினைவுகளை மீண்டும் அசைபோடுவது வரை, இந்த குழுவினர் பல தசாப்த கால நட்பையும், சினிமா பாரம்பரியத்தையும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தென்னிந்திய சினிமாவை வடிவமைத்த ஒரு மறக்க முடியாத சகாப்தத்திற்கு இந்த சந்திப்பு ஒரு நெகிழ்ச்சியானதாக அமைந்ததாகவும், திரையிலும், திரைக்கு வெளியேயும் உருவான உறவுகளை அனைவரும் போற்றி மகிழ்ந்ததாகவும் கூறினர். இந்த நிகழ்வின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.