”காத்து வாக்குல ஒரு காதல் “!
சென்னை புரொடக்க்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ” காத்து வாக்குல ஒரு காதல் “. இதில்,கதையின் நாயகனாக மாஸ் ரவி நடித்து இயக்கி யும் உள்ளார். கதா நாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா, மற்றும் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, சத்யா,பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த், மேனக்சன் மிப்பு மொசக்குட்டி, சஞ்சனா சிங், பிரியதர்ஷினி, பிரியங்கா, ரோபோ சங்கர், உள்படபலர் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெறும் ” சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் ” எனும் பாடலை தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார் மற்ற பாடல்களை சைந்தவி, ரஞ்சித், ரம்யா பேகேரா உள்ளிட்டோரும் பாடியுள்ளனர்.மத்திய தணிக்கை குழுவினரால் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் 8 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாகவுள்ளது