பின்னணி பாடகராக மாறிய ‘சின்னத்திரை’ புகழ் !
‘சின்னத்திரை’ காமெடி நடிகர் “புகழ்” கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக புகழ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.புகழுக்கு ஜோடியாக அறிமுக நாயகி பிரக்யா நயன் நடிக்கிறார். இதில்,எதிர் நாயகனாக ரவி மரியா நடிக்கிறார்.இவர்களுடன் வின்சென்ட் அசோகன், கும்கி அஸ்வின், திடியன் இந்திரன் உள்பட பலர் நடிக்கின்றனர் இப்படத்தின் ஒளிப்பதிவை யு.கே. செந்தில்குமார் கையாள, சுபாஷ் முனிரத்தினம் இசையமைக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார் புதுமுக இயக்குனர் சஜோ சுந்தர்.காமெடி திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பை பிரபல தயாரிப்பாளர் எச். முரளி, ஒளிப்பதிவாளர் சிவா இணைந்து கேமராவை சுவிட்ச் ஆன் செய்ய, சித்ரா லட்சுமணன் கிளாப் அடித்து துவக்கி வைத்தனர்.இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை நடிகர் புகழ் முதல் முறையாக விருஷா பாலு, ஜகதீஷ் குமார் ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸீன் 27 வது படைப்பாக உருவாகும் இப்படத்தை எம். ஸ்ரீ வத்சன், எம். கோகுல் கிருஷ்ணன் இணைந்து தயாரிக்க,. இணை தயாரிப்பை வி. கே. முருகேசன், திருப்பூர் ஜியோ ஏ. என். செல்வராஜ்.ஏற்றுள்ளனர்