வாழ்க்கையின் யதார்த்தம் பற்றி பேச வரும் ‘மிடில் கிளாஸ்’ திரைப்படம்!


பணக்காரர்களும் மிகப்பெரும் வசதி படைத்தவர்களும் வாழும் இந்த உலகில் அதிகம் பேசப்படாத இந்தியாவின் மிடில் கிளாஸ் ஹீரோக்களைப் பற்றி பேசவருகிறது  ‘மிடில் கிளாஸ்’ திரைப்படம்.  கிஷோர் முத்துராமலிங்கம்,எழுதி இயக்கியுள்ள இப்படம்,   மாதத்தவணை, தள்ளுபடி, 1பிஎச்கே,  சுற்றி இருக்கும் கனவு என நகைச்சுவை, எமோஷன்ஸ் என பல விஷயங்களை பேசுகிறது.  இந்தப் படம் வெறும் கதை மட்டுமல்லாது, ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு பார்த்து, சின்ன சின்ன விஷயங்களில் சந்தோஷப்பட்டு, வீட்டுக்கடனை விட அதிக சுமையாய் இருக்கும் மாதத்தவணை என மிடில் கிளாஸ் வாழ்க்கையின் யதார்த்தம் பற்றி பேசுகிறது.  பார்வையாளர்கள் பலரின் வாழ்வையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில்,’மிடில் கிளாஸ்’ தம்பதிகளாக முனீஷ்காந்த் , விஜயலட்சுமி ஆகியோர் நடிக்க,. இவர்களுடன் காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் ஒளிப்பதிவை  சுதர்ஷன் ஸ்ரீனிவாசன்,கவனிக்க,ப்ரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார்