நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம்! செப்டம்பர் 21 -ல் நடக்கிறது!!

 தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 வது பொதுக் குழு கூட்டம் அதன் தலைவர் நடிகர் நாசர் தலைமையில் வரும் செப்டம்பர்  காலை 10 மணி அளவில் சென்னை, தேனாம் பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தொடங்குகிறது.  இப் பொதுக்குழுவில் சங்கத்தின் பொது செயலாளர்  நடிகர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் லதா சேதுபதி, சோனியா, பசுபதி, ராஜேஷ், கோவை சரளா, காளிமுத்து, ஹேமச்சந்திரன் , சரவணன், அஜய் ரத்தினம், ரத்னாப்பா, வாசுதேவன் உள்பட3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். முன்னதாக காலை 8.30 மணியளவில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடக்கிறது.

இப்பொதுக்குழுவில், இறுதிக்கட்டத்தில் உள்ள நடிகர் சங்கத்தின் திறப்பு விழா குறித்தும், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் குறித்தும்,கொரோனா,நடிகர் சங்க வழக்குகள் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  நலிவுற்ற கலைஞர்களின் பென்ஷன் தொகை,மீண்டும் வழங்குவது குறித்தும், கலைஞர்களின் இன்சூரன்ஸ் பாலிசி புதுப்பித்தல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.