அரை பாட்டில் ‘பீர்’ குடிச்சுட்டு போட்ட ‘ஆட்டம்’ ! இளையராஜாவை கலாய்த்த ரஜினி !!

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசுநடத்திய பாராட்டு விழாவில் பேசிய இளையராஜா,”சில நாட்களுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் எனக்கு போன் செய்து நாம பண்ணதெல்லாம் மேடையில் சொல்லப்போகிறேன் என்று கூறினார். பெல்பாட்டம் பேண்ட் போட்டுக்கிட்டு நல்லா கிராப் முடி விட்டுட்டு கையில பட்டையா ஒரு வாட்ச் கட்டிக்கிட்டு…என பேசிக்கொண்டே ரஜினியை பார்த்து. சொல்லவா சொல்லவா… என்று கூறியாதும் ரஜினியும் சிரித்து கொண்டே தலையாட்டி சம்மதம் தெரிவித்தார் இதையடுத்து இளையாராஜா சிரித்தபடியே, இயக்குனர் மகேந்திரனும், நீங்களும் நானும் உக்காந்து குடிச்சோம். என்றதும் அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது . தொடர்ந்து இளைய ராஜா, ‘ஸ்டூடியோவில் வந்து என்னிடம் ரஜினி சொல்றாரு… நாம குடிச்சோம் நியாபமிருக்கா.என்றதும் ராஜினி உடனே எழுந்து ஓடி வந்து இளையராஜாவிட ம் இருந்த மைக்கை வாங்கி,.. “நீங்க அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு ஆடின ஆட்டம் இருக்கே… அதை சொல்ல போறேன் என்றார். நீங்க என்னவேனாலும் சொல்லிக்கோங்க எனக்கு கவலையில்லை” என்று இளையராஜா கூறியதும்,தொடர்ந்து ரஜினி, “ஜானி படத்திற்கு இசையமைக்கும்போது நானும் மகேந்திரனும் குடிச்சோம், அப்போது இளையராஜாவிடம் குடிக்கிறீர்களா என்று கேட்டோம். அவரும் ஓகே சொல்ல… அப்போது அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு அவரு போட்ட ஆட்டம் இருக்கே… 3 மணி நைட் வரைக்கும்… ஊருல இருக்க கிசுகிசு எல்லாம் கேக்குறாரு… குறிப்பா கதாநாயகிகளை பத்தி… அண்ணே பெரிய காதலன்…அதான் இந்த பாட்டெல்லாம்… அப்படி இருந்தவரு… இன்னும் நிறைய இருக்கு… அடுத்தவாட்டி வைச்சிக்கிறேன்” என்று கூறிவிட்டு தனது இருக்கைக்கு திரும்பினார் ரஜினி,இளைய ராஜா பேச்சால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. இதனையடுத்து பேசிய இளையராஜா, “இல்லாததை எல்லாம் ரஜினி அடிச்சி விட்டு போறாரு” என்று கிண்டலடித்தார்.