‘பாம்’ – விமர்சனம்!
அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம் புலி, பால சரவணன், டி எஸ் கே , கிச்சா ரவி, பூவையார், ஏ எப்புட்றா ரோகன், காவியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷால் வெங்கட் எழுதி இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு -பி எம் ராஜ்குமார்.இசை, டி இமான்.
காலம் காலமாக ஒற்றுமையாய் வாழ்ந்த காளக்கம்மாய்ப்பட்டி கிராம மக்கள், ஒரு கட்டத்தில் இரு சமூக பிரிவுகளாக பிரிகின்றனர். அதோடு, இரு சமூகத்தினரிடையே அவ்வப்போது மோதல்களும் வெடிக்கின்றன. இதனால், அரசுக்கு தலைவலி ஏற்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம்.
காளக்கம்மாய்ப்பட்டி கிராமத்தில் வசிக்கும் காளிவெங்கட், இரு பிரிவையும் ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார். இவருடைய தங்கை ஷிவாத்மிகா ராஜசேகரை அர்ஜூன் தாஸ் காதலிக்கிறார். இந்நிலையில், காளிவெங்கெட் மரணமடைகிறார். எல்லோரும் இறுதி சடங்கிற்கு தயாராகும் நிலையில், காளிவெங்கெட்டின் உடலிலிருந்து இயற்கை வாய்வு சத்தத்துடன் வெளிப்படுகிறது. இதனால், அர்ஜூன் தாஸ் காளி வெங்கெட் இறக்கவில்லை என நம்புகிறார். அந்த ஊரின் பூசாரி ஊருக்கு சாமி வந்திருப்பதாகக் கூறுகிறார்! இதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான், ‘பாம்’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், கிராமத்து பின்னணியில், வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எந்தவிதமான பில்டப்பும் இல்லாமல் எதார்த்தமான நடிப்பில் அனைவரது கவனத்தையும் எளிதில் கவர்ந்து விடுகிறார்.
நாயகியாக ஷிவாத்மிகா ராஜசேகர், கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண்ணாகவே தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். அவரது நடிப்பு அளவாகவும், ரசிக்கும்படியும் இருக்கிறது.
காளி வெங்கட், ஒவ்வொரு படத்திலும் சிறந்த குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர். இந்தப்படத்தில் பிணமாக சிறப்பாக நடித்து இருக்கிறார். இதன் மூலம் மீண்டும் தன்னை பலமான குணச்சித்த்ர நடிகராக முன்னிறுத்தியிருக்கிறார்.
அபிராமி, கலெக்ட்டராக அந்த கதாபாத்திரத்தினை கம்பீரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மற்றபடி அரசியல்வாதியாக நாசர், சிங்கம் புலி, பால சரவணன், டி எஸ் கே , கிச்சா ரவி, பூவையார், ஏ எப்புட்றா ரோகன், காவியா உள்ளிட்டோரும் கதாபாத்திரத்திகேற்றபடி நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் டி.இமான் இசை ஓகே!
ஒளிப்பதிவாளர் பி எம் ராஜ்குமார், சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
மிச்சம், மீதமிருக்கும் மூட நம்பிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார், இஅய்க்குநர் விஷால் வெங்கட் !
‘பாம்’ ஒரு வித்தியாசமான திரைப்படம்.