இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் மருத்துவமனையில் ‘திடீர்’ அனுமதி!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான சங்கர் கணேஷ் தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார். சில படங்களுக்கு இசையமைத்து வரும் சங்கர் கணேஷ், இசை நிகழ்ச்சி உள்பட பிற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.கரூரில் இன்று மாலையில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பாடல் பாடுவதற்காக சங்கர் கணேஷ் நேற்று தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பாடல் கம்போஸிங் பணியில் இருந்தார். அப்போது அவருக்கு ‘திடீர்’ மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஏற்கனவே அவருக்கு இதய நோயாழ் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு நுரையீரலில் ‘நீர்’ கோர்த்து உள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை மேல் சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு, இதயம் தொடர்பான பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளபட்டு வருகிறது.இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.