நடிகர் ரோபோ சங்கர் மருத்துவமனையில் ‘திடீர்’ அனுமதி !

சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி ,விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள ரோபோ சங்கர்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு,தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார், இந்நிலையில்,ரோபோ சங்கருக்கு நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை துரைப்பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நடிகர் ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா கூறியுள்ளதாவது,”தொடர் பட பிடிப்பு அதிக வேலை பளு காரணமாக குறைந்த ரத்த அழுத்தம்  ஏற்பட்டதாகவும், மருத்துவர்கள் 2 நாள் மருத்துவமனையில் தங்க வைக்க சொன்னதாகவும்  மற்றபடி பயப்படும் படி எதுவும் இல்லை”  என்றும் கூறியுள்ளார்