விஜய் கைது செய்யப்படுவாரா? முதல்வர் முக. ஸ் டாலின் பரபரப்பு பதில்!

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது./இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் நள்ளிரவில் கரூர் புறப்பட்டுச் சென்று . அங்கு அவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.மேலும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து . அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.இச் சமபவம் தொடர்பாக விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் முக. ஸ் டாலின் பதிலளிக்கையில்,”அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. ஆணையம் சொல்லும் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.நீங்கள் யார் கைது செய்யப்படுவார்கள்? என்று நீங்கள் கேட்பதற்கு எல்லாம் நான் என்னை உட்படுத்த தயாராக இல்லை” என்றார். ‘

 இதனிடையே, கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியான சம்பவ எதிரொலியாக, சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மற்றும் மற்ற மொழிகளில் வெளியான ‘புஷ்பா-2’ திரைப்பட ரிலீஸின் போது ஹைதராபாத் தியேட்டர் ஒன்றில் அப்படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் வந்தார். அப்போது அவரை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில், நடிகர் அல்லுர் அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அதே போல், விஜய்யும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.