மமிதா பைஜுவுடன் விஜய் நடத்திய ‘தளபதி கச்சேரி’!

நடிகர் விஜயின் கடைசி படமாக உருவாகி, வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள ஜன நாயகன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. அனிருத் இசையில் விஜய் -பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூவின் அசத்தலான நடனத்தில் வெளியான பாடல் தான் தளபதி கச்சேரி. பாடலில் “நண்பா நண்பி செல்லம் பாரு.. நம்பிக்கையா சேரு.. இருக்குதுடா.. காலம் பொறக்குதுடா” என ஆரம்பத்திலேயே அனிருத்தின் குரலில் , விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கான வரிகளும் விஜய் ஆட்சி வந்தால் நல்ல காலம் பொறக்கும் என்கிற உணர்வும் திணிக்கப்பட்டுள்ளது. மேலும், “தனக்குன்னு வாழாத.. நீ தரத்துல தாழாத.. ஒருத்தனும் வாரானே.. திருத்திட போறானே” என ஓபனிங்கே விஜய்யின் அரசியல் வருகைக்கான வரிகளுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது மேலும் நடிகர் விஜய், ‘தளபதி கச்சேரி’ பாடலில் பாடும் போது, “ஒரு மாபெரும் நாடு.. அதன் வேர்களில் நம்ம வேர்வை பாரு” என விவசாய மக்களையும் தமிழ்நாட்டு மக்களையும் கவரும் விதமான வரிகளை பாடியுள்ளார். அறிவு இந்த வரிகளை எழுதி அசத்தியுள்ளார்..”ஆவோ டுகெதர் பய்யா பய்யா.. ஜாதி பேதமெல்லாம் லேதய்யா” என்கிற இந்தி வரிகளும் அதனை தொடர்ந்து “நீங்கள் சிநேகம் போல்” என்கிற மலையாள வரிகளும் ஜன நாயகன் பாடலில் இடம்பெற்றூள்ளன.இப் படத்தில் விஜய் உடன் இணைந்து பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, ரேவதி, நிழல்கள் ரவி, ஸ்ரீநாத் நரைன் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்..