நடிகர் தர்மேந்திரா நலமுடன் உள்ளார் ! ஹேமமாலினி ,மகள் ஈஷா தியோல் தகவல்!!
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) சமீபத்தில் மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தர்மேந்திரா, மூச்சு திணறல் ஏற்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் ஐசியுவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதேசமயம், தர்மேந்திரா வரும் டிசம்பர் 8ம் தேதி தனது 90வது பிறந்தநாளை கொண்டாட உள்ள சூழலில் இது ஒரு வழக்கமான பரிசோதனை என்றும் கூறப்பட்டது.இது குறித்து தகவலறிந்த பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் சல்மான் கான். ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அவரது உடல் நலம் குறித்து நடிகர் தர்மேந்திராவின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான ஹேம மாலினி, மற்றும் சன்னி தியோல் பாபி தியோல் ஆகியோரிடம் விசாரித்தனர் இந்நிலையில் நேற்று மாலை , தர்மேந்திராவின் உடல்நிலை மோசமடைந்ததாக செய்திகள் வெளியான உடன் சன்னி தியோல், பாபி தியோல், கரண் தியோல் மற்றும் ராஜ்வீர் தியோல் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மும்பை மருத்துவமனைக்கு விரைந்தனர். சல்மான் கான், கோவிந்தா மற்றும் அமீஷா படேல் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் தர்மேந்திராவின் உடல்நிலையை விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தனர்.உடல்நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு இந்திய திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவிக்க தொடங்கிய நிலையில் ஈஷா தியோல் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகை ஈஷா தியோல் தனது தந்தை தர்மேந்திராவின் உடல்நலம் குறீத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது,””தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. என் தந்தையின் உடல்நிலை சீராகவும், முன்னேற்றமாகவும் உள்ளது. என் தந்தை விரைவில் குணமடைய உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் தர்மேந்திரா உயிரிழந்ததாக தகவல் வெளியாகிய நிலையில் அவரது மகள் ஈஷா தியோல் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல், நடிகர் தர்மேந்திரா உயிருடன் இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,“நடப்பது மன்னிக்க முடியாதது! சிகிச்சைக்கு பதிலளித்து குணமடைந்து வரும் ஒரு நபரைப் பற்றி பொறுப்புள்ள சேனல்கள் எப்படி பொய் செய்திகளை பரப்ப முடியும்? இது மிகவும் அவமரியாதையான மற்றும் பொறுப்பற்ற செயல். எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு உரிய மரியாதை கொடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.. நடிகர் தர்மேந்திரா.சுமார் 60 வருடங்களாக பாலிவுட் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் . தர்மேந்திராவின் மனைவி ஹேமாமாலினி. தர்மேந்திராவின் மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல், மகள் ஈஷா தியோல் ஆகியோர் திரை உலகில் பிரபலமாக நடிகர்களாக உள்ளனர். தர்மேந்திரா ‘ஆயி மிலன் கி பேலா’, ‘ஃபூல் அவுர் பத்தர்’, ‘ஆயே தின் பஹார் கே’, ‘சீதா அவுர் கீதா’, ‘ராஜா ஜானி’, ‘ஜுக்னு’, ‘யாதோன் கி பாராத்’, ‘தோஸ்த்’, ‘ஷோலே’, ‘பிரதிக்ஞா’, ‘சரஸ்’, ‘தரம் வீர்’ போன்ற பல படங்களில் தனது நடிப்பு முத்திரையை பதித்துள்ளார். கடைசியாக 2023-ல், கரண் ஜோஹர் இயக்கிய ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படத்தில் அவர் நடித்து இருந்தார் .