சர்வதேச நடிகை – நடனக் கலைஞர் – தயாரிப்பாளர் – தொகுப்பாளர் – சமூக செயற்பாட்டாளர் – என பன்முக ஆளுமை மிக்க நடிகை சந்திரிகா ரவி, தற்போது உலகளாவிய பொழுதுபோக்கு அம்சங்களின் எல்லையை மறு வரையறை செய்து வருகிறார்.சிங்கப்பூரை சார்ந்த தமிழ்- மலையாளி பெற்றோருக்கு மகளாக ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் பிறந்த சந்திரிகா ஹாலிவுட்டையும், இந்திய சினிமாவையும் தடையின்றி இணைக்கும் ஒரு புதிய நடைமுறையை உருவாக்கி இருக்கிறார்.
2018 ஆம் ஆண்டில் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் இந்திய சினிமாவிற்கு அறிமுகமான அவர்.. 2023 ஆம் ஆண்டில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து ₹100 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்த ‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் 365 நாட்கள் ஓடி புதிய சாதனையையும் படைத்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘மா பாவா மனோபாவலு’ எனும் பாடல் யூடியூபில் வெளியாகி ஐம்பது மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
சர்வதேச அளவில் பத்துக்கு மேற்பட்ட திரைப்படங்களில் தன்னுடைய பங்களிப்பை நிறைவு செய்திருக்கும் இவர் தற்போது ஹாலிவுட் மற்றும் இந்திய சினிமாவில் தன்னுடைய தடத்தை பதித்து புதிய உச்சத்தை அடைவதற்கான பயணத்தை தொடர்கிறார்.

தற்போது அவர் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் சைக்காலஜிக்கல் திரில்லராக தயாராகும் ‘அன்கில்_123 ‘எனும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் /இயக்குநர் அனுராக் காஷ்யப் கதையின் நாயகனாக நடிக்கிறார். இதைத்தொடர்ந்து மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி அதிகாரப்பூர்வமான வரலாற்றுப் படமாக தயாராகும் ‘சில்க் ஸ்மிதா: குயின் ஆஃப் தி சவுத்’ எனும் திரைப்படத்தில் துணிச்சலாகவும், அர்த்தமுள்ள கதை சொல்லும் பாணியிலும் உருவாகி வரும் படத்தில் இவர் முக்கிய வேடத்தில்.. சில்க் ஸ்மிதாவாக நடித்து வருகிறார்.
2024 ஆம் ஆண்டில் சந்திரிகா ‘ஐஹார்ட் ரேடியோ ( iHeart Radio) மற்றும் ருகுஸ் அவென்யூ ரேடியோ ( Rukus Avenue Radio) ஆகிய பண்பொலி வானொலியுடன் இணைந்து தி சந்திரிகா ரவி ஷோ ( The Chandrika Ravi Show) எனும் நிகழ்ச்சியை தொடங்கினார். அமெரிக்காவில் பிரபலமான முக்கிய வானொலி நிகழ்ச்சியை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திய முதல் இந்திய நடிகை என்ற சரித்திரத்தையும் இவர் படைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டிருக்கிறது.
மூன்று வயதிலிருந்து பாரம்பரிய நாட்டியம் மற்றும் நடிப்பில் பயிற்சி பெற்ற சந்திரிகா நியூயார்க் திரைப்பட அகாடமியில் டிப்ளமோ பட்டம் பெறுவதற்கு முன்பு, தி டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா நேஷனல் யூத் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் குரூப் போன்ற நிறுவனங்களிலும் பயின்று தன்னை மெருகேற்றி கொண்டார். 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் திரைப்படத்திற்கான நடிப்பில் முதுகலை பட்டம் ( MFA) பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்றதன் மூலம் அவர் மீண்டும் புதிய சாதனையை படைத்தார்.

பொழுதுபோக்கு துறையை கடந்து பாலின சமத்துவம் – மனநலம் – குழந்தைகள் நலன் மற்றும் கலரிசம் எனக் குறிப்பிடப்படும் நிற வேற்றுமை உள்ளிட்ட பல விசயங்களில் அவர் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். யுனிசெப் இந்தியா மற்றும் சர்வதேச அளவில அளவில் செயல்படும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சமூக செயற்பாட்டாளராகவும் பணியாற்றுகிறார்.
தற்போது சென்னை மற்றும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் ஆகியவற்றை தளமாக கொண்டு செயல்படும் சந்திரிகா ரவி – தன்னுடைய எல்லைகளை தொடர்ந்து விரிவு படுத்தி வருகிறார். சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் வலுவான கதை சொல்லலை கொண்ட படைப்புகளிலும்.. இந்திய திரைப்படங்களிலும் .. பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறார்.












