பாலகிருஷ்ணாவுடன் 4 வது முறையாக ஜோடி சேர்ந்த நயன்தாரா !

தெலுங்கு திரையுலகின்  காட் ஆஃப் த மாஸஸ் என ரசிகர்களால்அழைக்கப்படும்  நந்தமூரி பாலகிருஷ்ணா, வீரசிம்ஹாரெட்டி படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும்  இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்த்துள்ளார்.  “பெத்தி” எனும்  பான்–இந்திய படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து வருகிறார்.இந்நிலையில் இப்படத்தில்
நடிகை  நயன்தாரா,  பாலகிருஷ்ணாவின் ஜோடியாக, கதாநாயகியாக இணைந்துள்ளார். படத்தின் கதையில் முக்கியத்துவமிக்க, சக்திவாய்ந்த கதாபாத்திரத்தை அவர் ஏற்கிறார். சிம்ஹா, ஜெய் சிம்ஹ , ஸ்ரீ ராம ராஜ்யம் ஆகிய மூன்று படங்களுக்கு பிறகு, பாலகிருஷ்ணா–நயன்தாரா ஜோடி  நான்காவது முறையாக இணைவதால், ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இது குறித்த அறிவிப்பு நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோவில், முதல் முறையாக வரலாற்று படத்தில் களம் இறங்கும் இயக்குநர் கோபிச்சந்து மலினேனி,  குதிரையில் வரலாற்று ராணியாக நயன்தாராவை அறிமுகப்படுத்தி,  ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.இயக்குநர் கோபிசந்த் மலினேனி, இம்முறை பாலகிருஷ்ணாவை இதுவரை காணாத புதிய கதாப்பாத்திரத்தில் வடிவமைக்கிறார். வரலாற்று பின்னணியில் எமோசனும் ஆக்சனும் கலந்த மிகப்பெரும் அனுபவத்தை, பிரம்மாண்ட காட்சிகளுடன் வழங்கப் போகிறது இந்த படம்.இப் படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்கிறது படக்குழு..