சிவகார்த்திகேயனின் ‘ரத்னமாலா’ பாடல் வெளியானது!

இறுதி சுற்று, சூரரை போற்று உள்ளிட்ட படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் புதிய படம் பராசக்தி. இப்படத்தில் சிவாகார்த்திகேயன்,ரவிமோகன், அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். நடிகை ஸ்ரீ லீலா இப்படத்தின் மூலம் தமிழில் கதா நாயகியாக அறிமுகமாகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிறது.

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலாக ’அடி அலையே ’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் 2வது பாடலான “ரத்னமாலா”இன்று மாலை வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.ஜெயஸ்ரீ மதிமாறன் எழுதியுள்ள இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். தற்போது நடிகர்கள் ரவிமோகன், அதர்வா ஆகியோர் தங்கள் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளனர்.

இப்படம் நேரடி மோதலாக பொங்கலுக்கு வெளியாக உள்ள நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்துடன் மோதுவதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படம் திரைக்கு வர இன்னும் 50 நாட்கள் உள்ளநிலையில், படக்குழு புதிய போஸ்ட்ரை வெளியிட்டுள்ளது.