தமிழ் திரையுலகில் லவ் டுடே, டிராகன், டியூட் படங்களின் மூலம் சினிமாவின் தயாரிப்பாளர்களின் நாயகனாக மாறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி யுள்ள ‘எல்ஐகே’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது எஸ்.ஜே. சூர்யா, க்ரித்தி ஷெட்டி, யோகி பாபு, சீமான், கௌரி கிஷன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இம்மாதம் 18ஆம் தேதி எல்ஐகே திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில், தற்போது திடீரென தள்ளி வைக்கப்பட்டு, வரும் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி காதலர் தினத்திற்கு முன் வெளிவரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.












