நடிகர் விஷாலின் மேலாளர் அதிரடி நீக்கம்!

நடிகர் விஷாலின் மக்கள் நல இயக்கத்தின் செயலாளராக பொறுப்பு வகித்தவர் ஹரிகிருஷ்ணன். நடிகர் விஷாலின் மேனேஜராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், ஹரிகிருஷ்ணனை அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கியுள்ளார் விஷால். இதுதொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியுள்ளதாவது,”வணக்கம், நான் இந்தக் கடிதத்தின்  வாயிலாக தங்களுக்கு அனைவருக்கும் தெரிவிப்பது, வ.ஹரிகிருஷ்ணன் அவர்கள் எனது விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனம், தேவி சமூக சேவை அறக்கட்டளை மற்றும் நமது விஷால் மக்கள் நல இயக்கம் ஆகியவற்றுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தத் திறனிலும் தொடர்புடையவர் அல்ல.பொதுமக்கள், திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என் தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் வ.ஹரிகிருஷ்ணனைத் தொடர்பு கொள்ளவோ அல்லது கையாளவோ வேண்டாம் என்று இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தகவல்கள் ஏதேனும் இருந்தால், உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.