பராசக்தி படத்துக்கு சிக்கல் தீர்ந்தது! 52 வசனங்கள் மியூட்! 25 சொற்கள் மாற்றங்களுடன் நாளை திட்டமிட்டபடி வெளியாகிறது!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம், நாளை வெளியாவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜனநாயகன் திரைப்படத்தைப் போலவே, பராசக்தி படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி, 1960களில் நடைபெறுவது போன்ற இதன் கதைகளம் அமைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து தணிக்கை வாரியம், இப்படத்தில் இடம் பெற்ற குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்த நிலையில், தணிக்கை வாரியம் பராசக்தி திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.இப்படத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான 52 வசனங்கள் மியூட் செய்யப்பட்ட நிலையில்,
மொத்தம் 25 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் அறிஞர் அண்ணாவின் புத்தகமான “தீ பரவட்டும்” என்ற வார்த்தை நீக்கப்பட்டு நீதி பரவட்டும் என்றும்,அறிஞர் அண்ணாவின் வாசகங்களான “எங்களை நீக்கிவிட்டு வேறொருவர் வந்து உட்கார்ந்தாலும்”, “இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்ற பொருள்” ‘சிறுக்கி’, ‘கொடில காய வச்ச துணி மாதிரி’ என்ற வார்த்தைகள் மௌனமாக்கி தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியிருக்கிறது.
இந்த படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது.இந்நிலையில் இது வரை விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை குழு சான்றிதழ் இன்னும் உறுதியாகாத நிலையில் பராசக்தி திரைப்படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா நடிப்பில் இப்படம் உருவாகியிருக்கிறது .