பொங்கலுக்கு வெளியாகும் கார்த்தியின் ‘ வா வாத்தியார்’ !

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி செட்டி, ராஜ்கிரண், இளவரசு, கருணாஸ், சத்யராஜ், ஆனந்தராஜ் ஆகியோரது நடிப்பில் , சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள புதிய படம், ‘வா வாத்தியார்’ இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு சில காரணங்களினால் தள்ளிவைக்கப்பட்டு வந்த நிலையில்,தற்போது படக்குழு வருகிற 14ஆம் தேதி பொங்கலுக்கு வா வாத்தியார் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது