விஜய் சேதுபதி-பூரி ஜெகன்னாத் கூட்டணியில் உருவான “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” !
ஸ்டைலிஷ் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் அதிரடி கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB Motion Pictures நிறுவனத்தின் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா (JB Narayan Rao Kondrolla) இணைந்து தயாரிக்கிறார்.தன் நாயகர்களை தனித்துவமான மேக்கோவர்களுடன் மாஸாக உருவாக்குவதில் பெயர் பெற்ற பூரி ஜெகன்னாத், இந்த படத்திலும் அதை நிரூபித்துள்ளார். விஜய் சேதுபதி, இதுவரை தனது திரை வாழ்க்கையில் முயற்சிக்காத, முற்றிலும் புதிய ஒரு பாத்திரத்தில் இப்படத்தில் தோன்றுகிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.மேலும், பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை பாத்திரங்களில் கலக்கியுள்ளனர்
அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களில் துடிப்பான இசையமைப்பை வழங்கிய தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப் படம், தமிழ், தெலுங்கு ,கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.