Monday, March 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஆரி அர்ஜுனன் – தீப்ஷிகா நடித்த 4த் ஃப்ளோர் 27 ஆம் தேதி வெளியாகிறது!

admin by admin
February 18, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா  தயாரிப்பில், இயக்குநர் L R  சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான  திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம்  “4த் ஃப்ளோர்”.  இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

You might also like

‘சேயோன் ‘படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன்! என்ன கேரக்டர் தெரியுமா?

ரசிகர்களை கவர்ந்த நோரா ஃபதேஹி யின் ‘திற நீ எந்தன் தரணி திற நீ’ பாடல்!

‘நாகபந்தம்’ படத்தின் ஆன்மீக கீதமான ( Spiritual Anthem) ‘நமோ ரே ‘ ( NAMO Re) வெளியீடு!

இந்நிகழ்வினில்..,

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது..,

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் என் நீண்டகால நண்பர். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்திலிருந்து அவருடைய வேலை என்னை எப்போதும் பிரமிக்க வைத்திருக்கிறது. அமைதியாக, நேர்த்தியாக, மிகப் பெரிய அழுத்தத்தை ஹேண்டில் செய்து ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வருவது சுலபமல்ல. அந்த வகையில் இந்த படக்குழு பாராட்டுக்குரியது. இது ஒரு டிஃப்ரெண்டான ஜானரில் வந்திருக்கும் படம்.  நிச்சயமாக பெரிய வெற்றி அடையும். தயாரிப்பாளருக்கும்,  என் ஊரான பழனியிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள ஹீரோ ஆரிக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

நடிகர் பரத் பேசியதாவது..,

ஆரியும் நானும்  பல வருடங்களாக இந்த இன்டஸ்ட்ரியில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு வருடம் முன்னாடி தான் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தோம். எனக்கு தனிப்பட்ட முறையில், க்ரைம் திரில்லர் என்ற ஜானர் எப்போதுமே பிடிக்கும். என்னுடைய  திரைப்பயணத்தில் தெரியாமலேயே,  கடைசி ஏழு படங்களும் திரில்லர் படங்களாகவே அமைந்திருக்கிறது. அந்த ஜானருக்கு ஒரு உத்தரவாதம்  எப்போதும் இருக்கும். அதாவது, சரியான திரைக்கதையும், நல்ல  விளம்பரமும் இருந்தால் அந்த படம் நிச்சயமாக ஓடும். அந்த எல்லா அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது. குறிப்பாக, டைட்டில் டிசைன் கூட ரொம்ப அழகாகவும் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. இந்த படத்திற்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள். என்றார்.

இயக்குநர் சேரன் பேசியதாவது..,

திருப்பூர் என்று சொன்னாலே எனக்கு நிறைய நினைவுகள் மனசுக்குள்ள வந்து போகும். “திருப்பூர் புரொடியூசர்ஸ்” உடன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு பல வருடங்களாக இருந்தது. அந்த வகையில், இந்த படத்தை தயாரித்து, அதை ரிலீஸ் வரை கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதே ஒரு பெரிய விஷயம். அதற்காக முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.  இன்று பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுகிறார்கள். ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே நம்பி, அதையே நோக்கமாக கொண்டு வந்திருக்கிறீர்கள். அது எனக்கு சந்தோஷம்.

இந்த படத்தைப் பற்றி பேசும்போது, முதல் இம்ப்ரஷன் என்றால் அது நிச்சயமாக டைட்டில் டிசைன் தான். 4த் ஃப்ளோர் என்ற வார்த்தைக்கு இவ்வளவு கம்பீரமும், அழகும், அர்த்தமும் கொடுத்திருக்கிறார்கள். அந்த டைட்டிலே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. படத்தின் மற்ற எல்லா  அம்சங்கள் பார்த்தால், எல்லாமே ஒரு நம்பிக்கையை தருகிறது. இது இன்றைய தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் பிடிக்கும் வகையிலான ஒரு முயற்சி என்று எனக்கு தோன்றுகிறது.

இந்த படக்குழுவில் இருக்கும் பலரை நான் தனிப்பட்ட முறையிலும் அறிவேன். ஆரி  என் நண்பர், என் மாணவர், என் படத்தில் நடித்தவர். எந்த விதமான பின்புல ஆதரவுமில்லாமல், அவருடைய உழைப்பை மட்டுமே நம்பி இங்கு நிற்கும் மனிதர். அந்த வகையில், இந்த படம் அவருக்கு ஒரு அடையாளமாகவும், ஒரு நம்பிக்கையாகவும் அமைய வேண்டும். வாழ்த்துக்கள்.என்றார்.

இசையமைப்பாளர் தரண்குமார் பேசியதாவது..,

இன்று என்ன பேச வேண்டும் என்று முன்பே திட்டமிட்டு வரவில்லை. ஆனால் மேடையில் நின்றபோது ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருந்தது – இந்த படத்திற்கு உயிர் கொடுத்தவர் தயாரிப்பாளர் ராஜா சார் என்பதுதான். ராஜா சார் ஒரு குழந்தை மனசு கொண்டவர். இந்த படத்தின் மூலமாகத்தான் நான் அவரை நெருக்கமாக அறிந்தேன். ஆனால் அவருக்குள் இருக்கும் தீவிரமும், இந்த படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற வெறியும் என்னை மிகவும் ஈர்த்தது. இந்த விழாவுக்கும், இந்த ரிலீஸுக்கும் நான் வந்ததற்கான ஒரே காரணம் அவர்தான்.

சின்ன படங்கள் ஜெயிக்கணும் என்று நாம் எல்லாரும் பேசிக்கிட்டே இருக்கிறோம். ஆனால் அது நடக்கணும்னா, இப்படிப்பட்ட நேர்மையான முயற்சிகள் வெற்றி பெற வேண்டும். நான் செய்த பல படங்களின் இசை என் ஸ்டூடியோவுக்குள்ளேயே தங்கிப் போயிருக்கிறது. அந்த உழைப்பு வெளியே வந்து ஜெயிக்கணும்னா, இந்த மாதிரி படங்கள் வெற்றி பெற வேண்டும்.

ஆரி ப்ரோவுடன் ரொம்ப நாளாக ஒரு படம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. இன்று அது நிறைவேறியிருக்கிறது. அவர் ஒரு நடிகன் மட்டும் இல்ல; ஒரு சகோதரன் மாதிரி. மிக நேர்மையான, பொறுமையான, சின்சியரான மனிதர்.

இயக்குனர், ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் உட்பட முழு டெக்னிக்கல் டீமும் மிக அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். ஸ்கிரீன்ப்ளேவும், இசையும் சரியான இடத்தில் அமர்ந்திருக்கிறது. இந்த படம் ஜெயிக்கணும். ஜெயிக்கும். அதுதான் என் முழு நம்பிக்கை. நன்றி. என்றார்.

இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது..,

‘4த் ஃப்ளோர்’ என்ற டைட்டிலே மிக அட்டகாசமாக இருக்கிறது. ஒரு படத்திற்கு முதல் டிக்கெட் என்பது அதன் டைட்டிலும், அதன் விளம்பர முகமும் தான். ஒரு மனிதன் திரையரங்குக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவது அந்த முதல் பார்வையே. அதை இப்படம் உருவாக்கியுள்ளது.

ஆரியை பல வருடங்களாக எனக்குத் தெரியும் பிக்பாஸில் ஜெயித்த போது அதன் புகழை இயற்கை விவசாயத்துக்கு பயன்படுத்தியவர். மிகச்சிறந்த மனிதர். அவரது இந்தத் திரைப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். என்றார்.

செவன்த் ஸ்டுடியோ சார்பாக K.கண்ணன் பேசியதாவது..,

எனக்கு முதன்முதலில் சினிமாவை  உணர வைத்தவர் என்றால், அது ராஜா சார் தான். சென்னை வந்த போது,  ஆரம்பித்த நட்பு, அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தொடர வேண்டும் என்பதே என் ஆசை. அந்த நம்பிக்கையோடுதான் நாங்கள் இந்தப் பயணத்தை தொடர்ந்து வருகிறோம்.

இந்த படம் 27-ஆம் தேதி ரிலீஸ் ஆகப் போகிறது. அதற்காக நாங்கள் முழு நம்பிக்கையோடு, கவனமாக தயாராகிக் கொண்டிருக்கிறோம். மீண்டும் ஒரு வெற்றியாக இந்த படம் மாற, உங்கள் அனைவரின் ஆதரவும், ஊக்கமும் எங்களுக்கு தேவை. அந்த ஆதரவை தொடர்ந்தும் கொடுங்கள். நன்றி.”

இயக்குநர் L R சுந்தரபாண்டி பேசியதாவது..,

இது எனக்கு மூன்றாவது படம். தயாரிப்பாளர் ராஜா சார். அவரை அண்ணன் என்று சொல்லவா, நண்பர் என்று சொல்லவா எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி – இந்த படத்தின் மூலம் ஒரு ஆழமான நட்பு உருவாகியுள்ளது.

இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், கதை ரீதியாக இது ஒரு ஜானர் மிஸ்டேக் உள்ள படம். ஒரே ஜானருக்குள் அடக்க முடியாத கதை இது. முதலில் கேட்கும்போது இது ஹாரர் படம் மாதிரி தோன்றலாம்; அடுத்த நிமிஷம் திரில்லராக மாறும். அதற்குள் காமெடியும் கலந்து வரும்.“இது என்ன ஜானர்?” என்று கேட்டால், ஒரே வார்த்தையில் சொல்ல முடியாத படம்.கதையை முதலில் கேட்டவுடனே ஆரி  சார் இந்த படத்தில் இணைந்தார். இந்த கதையின் மேல் நம்பிக்கை வைத்து உள்ளே வந்த முதல் நபர் அவர்தான். அதுமட்டுமல்ல, சின்னதாக ஆரம்பித்த இந்த படத்தை பெரிய அளவுக்கு கொண்டு போக வேண்டும் என்ற எண்ணத்தையும் அவர்தான் கொடுத்தார்.

இது தயாரிப்பாளர்–டெக்னீஷியன் உறவாக இல்லாமல், நண்பர்கள் சேர்ந்து செய்த ஒரு படமாக வந்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர், பாடல்கள், எமோஷன் எல்லாம் கலந்து வந்த ஒரு முயற்சி. அது உங்களுக்கெல்லாம் ஒரு திருப்தியான அனுபவத்தை தரும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இப்போது உங்கள் கைகளில்தான் உள்ளது. மீடியா நண்பர்கள் அனைவரும் இந்த படத்திற்கு உங்கள் முழு ஆதரவை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நடிகர் ஆரி பேசியதாவது..,

இன்றைக்கு நல்ல சினிமா எடுத்தவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும் என்பதே மிக முக்கியமான விஷயம், அதுதான் இந்த விழாவின் உண்மையான அர்த்தம். எதற்கும்  நேரமும் உடல் உழைப்பும் தேவைப்படும் இந்த காலகட்டத்தில், தொலைபேசி அழைப்பை மதித்து வந்து நீண்ட நேரம் காத்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி.

சினிமாவில் குவாலிட்டி, மரியாதை, ஒழுக்கம் போன்றவை வெளியே தெரியும் விஷயங்கள் அல்ல; அருகில் இருப்பவர்களுக்கே அது புரியும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றி. பிக்பாஸுக்கு பிறகு என் படங்கள் பெரிதாக வரவில்லை ஆனால் கலைஞர் டிவியில் நான் செய்த ஷோ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆரி, படம் செய்வதில்லை. அவருக்கு என்ன பிஸினஸ் இருக்கிறது என பலர் சொன்ன போதும்,  அதை கண்டுகொள்ளாமல், படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது .என இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கு நன்றி.  இதில் எனது நண்பர்கள் பலரும் பணிபுரிந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இப்படத்திற்காக உண்மையாக  உழைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நாங்கள் எல்லோரும் சண்டை போட்டுள்ளோம், ஆனால் அது எல்லாம் படத்திற்காக தான். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இங்கு வெற்றி தான் எல்லாரையும் முன்னிறுத்துகிறது. வெற்றி பெற்றால் எல்லோரும் ஸ்டார் தான். எனக்கு பிக்பாஸுக்குப் பிறகு பெரிய வரவேற்பு இருப்பதாக பலர் சொன்னார்கள். எனக்கு  என்ன வரவேற்பு இருக்கிறது என எனக்கு உண்மையிலேயே தெரியாது.  நான் அதை எதையும் கண்டுகொள்வதில்லை. உண்மையான உழைப்பை தருவோம் என உழைத்துள்ளேன். கண்டிப்பாக எல்லோருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

இப்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க, நடிகை தீப்ஷிகா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா, சுப்ரமணிய சிவா,தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.  தீர்க்கதரிசி என்ற திரைப்படத்தை பரபரப்பாக இயக்கியிருந்த எல். ஆர். சுந்தரபாண்டி அதே வேகத்தில் ஃபோர்த் ஃப்ளோர் படத்தை இயக்கியுள்ளார்.  தணிக்கை செய்யப்பட்ட  இந்தபடம் யூ/ஏ தரச் சான்றிதழ் பெற்றுள்ளது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

“போடா போடி” படப்புகழ் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், “போடா போடி”, வெண்ணிலா கபடி குழு” படங்களின் ஒளிப்பதிவாளர் J லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்துள்ளார்.

செவன்த் ஸ்டுடியோ சார்பாக K.கண்ணன் இப்படத்தை தமிழ்நாடு தியேட்டர் வெளியீடு செய்கிறார். இப்படம் வரும்  27ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

admin

admin

Related Posts

‘சேயோன் ‘படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன்! என்ன கேரக்டர் தெரியுமா?
News

‘சேயோன் ‘படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன்! என்ன கேரக்டர் தெரியுமா?

by admin
March 16, 2026
ரசிகர்களை கவர்ந்த நோரா ஃபதேஹி யின் ‘திற நீ எந்தன் தரணி திற நீ’ பாடல்!
News

ரசிகர்களை கவர்ந்த நோரா ஃபதேஹி யின் ‘திற நீ எந்தன் தரணி திற நீ’ பாடல்!

by admin
March 16, 2026
‘நாகபந்தம்’ படத்தின் ஆன்மீக கீதமான ( Spiritual Anthem) ‘நமோ ரே ‘ ( NAMO Re) வெளியீடு!
News

‘நாகபந்தம்’ படத்தின் ஆன்மீக கீதமான ( Spiritual Anthem) ‘நமோ ரே ‘ ( NAMO Re) வெளியீடு!

by admin
March 16, 2026
பூமாலையே தோள் சேரவா….திரிஷா சொல்லும் ‘ரகசிய’ செய்தி?
News

பூமாலையே தோள் சேரவா….திரிஷா சொல்லும் ‘ரகசிய’ செய்தி?

by admin
March 15, 2026
சின்னத்திரை முதல்  சினிமா ஹீரோ வரை… குமரனின் புதிய அத்தியாயம்!
News

சின்னத்திரை முதல் சினிமா ஹீரோ வரை… குமரனின் புதிய அத்தியாயம்!

by admin
March 15, 2026

Recent News

ரசிகர்களை கவர்ந்த நோரா ஃபதேஹி யின் ‘திற நீ எந்தன் தரணி திற நீ’ பாடல்!

ரசிகர்களை கவர்ந்த நோரா ஃபதேஹி யின் ‘திற நீ எந்தன் தரணி திற நீ’ பாடல்!

March 16, 2026
‘நாகபந்தம்’ படத்தின் ஆன்மீக கீதமான ( Spiritual Anthem) ‘நமோ ரே ‘ ( NAMO Re) வெளியீடு!

‘நாகபந்தம்’ படத்தின் ஆன்மீக கீதமான ( Spiritual Anthem) ‘நமோ ரே ‘ ( NAMO Re) வெளியீடு!

March 16, 2026
பூமாலையே தோள் சேரவா….திரிஷா சொல்லும் ‘ரகசிய’ செய்தி?

பூமாலையே தோள் சேரவா….திரிஷா சொல்லும் ‘ரகசிய’ செய்தி?

March 15, 2026
சின்னத்திரை முதல்  சினிமா ஹீரோ வரை… குமரனின் புதிய அத்தியாயம்!

சின்னத்திரை முதல் சினிமா ஹீரோ வரை… குமரனின் புதிய அத்தியாயம்!

March 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?